மாத்தளை மனித புதைகுழி விவகாரத்தை மூடி மறைப்பதற்கு அரசாங்கம் முயற்சித்து வருவதாக ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது. ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நிறுவி அதன் மூலம் விசாரணைகளை திசை திருப்ப அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.
மாத்தளை மனித புதைகுழி சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் விசாரணைகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் அரசாங்கம், ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நிறுவியுள்ளதாக ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் நீதிமன்ற விசாரணைகள் நடத்தப்படுவதற்கு முன்னதாக எவ்வித ஆணைக்குழுக்களும் அமைக்கப்படவில்லை என தெரிவித்துள்ளது.
திடீரென ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நிறுவி விசாரணை நடாத்தும் முனைப்புக்கள் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
1995ம் ஆண்டில் ரீ.சுந்தரலிங்கம் தலைமையில் 88-89களில் காணாமல் போனவாகள் பற்றி ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
காணாமல் போதல் சம்பவங்களுடன் பிரபல அரசியல்வாதிகளுக்கு தொடர்பு இருப்பதாக இந்த விசாரணைகளின் மூலம் தெரிய வந்ததாகக் குறிப்பிட்டுள்ளது.
எனினும், இந்த விசாரணைப் பரிந்துரைகள் இதுவரையில் அமுல்படுத்தப்படவில்லை என ஜே.வி.பி தெரிவித்துள்ளது. இதே நிலைமை தான் புதிய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைக்கும் நேரும் என குறிப்பிட்டுள்ளது.
Post a Comment