குற்றச் செயல்களுடன் தொடர்புடைய ஐவர் சிலாபம் பொலிஸாரால் கைது / கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை / திருமணம் முடித்து வைத்த பதிவாளர் இடைநிறுத்தம்

 

குற்றச் செயல்களுடன் தொடர்புடைய ஐவர் சிலாபம் பொலிஸாரால் கைது-
பல குற்றச்செயல்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஐவர் சிலாபம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புத்தளம் மாவட்டம் சிலாபம் பொலிஸ் நிலையத்தின் தீர்க்கப்படாத குற்றங்கள் தொடர்பான பிரிவிற்குக் கிடைத்த தகவலுக்கமைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 21ஆம் திகதி மாதம்பேயில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரிடம் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து இவர்கள் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதனைத் தொடர்ந்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
இவர்களிடமிருந்து துப்பாக்கியொன்றும் அதிசக்தி வாய்ந்த கைக்குண்டு ஒன்றும் ரவைகள் உள்ளிட்ட சில பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
திருமணம் முடித்து வைத்த பதிவாளர் இடைநிறுத்தம்-
திருமணம் முடித்து வைத்த திருமணப்பதிவாளர், அரச பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளார்.
அநுராதபுரம் புதிய நகர்பிரிவின் பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளரும், நுவரகம பிரதேச திருமணப் பதிவாளருமான காமினி பண்டாரநாயக்கவே இவ்வாறு பதிவாளர் நாயகத்தினால் பதவியிலிருந்து இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்து குற்றச்சாட்டுகள், தொடர்பில் அரச பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது நிரூபிக்கப்பட்டமையினால் அவர் பதவியிலிருந்து இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சு அறிவித்துள்ளது.
வயது குறைந்த சிறுமிக்கு வயதை கூட்டி திருமணம் செய்து வைத்தமை மற்றும் பிறப்புச்சான்றிதழ் பத்திரத்தில் திருத்தங்கள் மேற்கொண்டமை போன்ற குற்றச்சாட்டுகளே அவருக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்தன.
அவரை பதவியிலிருந்து நீக்கியமை தொடர்பில் மாவட்ட செயலாளருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சு அறிவித்துள்ளது.
கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை-
கட்டுநாயக்கவை அண்மித்த கந்தானை, அம்பிட்டிய பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் நடத்திச் செல்லப்பட்ட மதுபான விற்பனை நிலையம் ஒன்று சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.
இதன்போது அங்கிருந்த சுமார் ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான சட்டவிரோத மதுபானங்கள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த மதுபான விற்பனை நிலையத்திலிருந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கலால் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
இங்கு 7,380 லீட்டர் கோடா, 88,000 லீட்டர் ஸ்பிரிட் மற்றும் மதுபான தயாரிப்புக்காக பயன்படுத்தப்படும் உபகரணங்களும் மிட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டவுள்ளார்.
 

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger