இலங்கை தொடர்பில் அவதானம் -நோர்வே / பகிர்ந்தளிப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் – திகாம்பரம் எம்.பி. வலியுறுத்தல் / அனர்த்தம் குறித்த அறிவிக்குமாறு கோரிக்கை


 

இலங்கை தொடர்பில் அவதானம் -நோர்வே-
இலங்கை இனப்பிரச்சினை தீர்வில் மத்தியஸ்த நிலைப்பாடு முடிவடைந்து பல வருடங்கள் கழிந்த போதும் இலங்கை தொடர்பில் தொடர்ந்தும் அவதானம் செலுத்தி வருவதாக நோர்வேயின் முன்னாள் சமாதான பிரதிநிதி எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
அண்மையில் தாம் அவுஸ்திரேலியாவுக்கு சென்றிருந்த போது புலம்பெயர்ந்த தமிழர்களை சந்தித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கருத்துரைத்துள்ள அவர் இலங்கை தொடர்பில் செய்திகளை அறிந்துக் கொள்ளும் தாம் அது தொடர்பானவர்களை சந்தித்து வருவதாகவும் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
தனித்தமிழீழம் என்றக் கோரிக்கையை நிராகரித்துள்ள சொல்ஹெய்ம், இலங்கையின் ஜனநாயக வரம்புக்குள் கலந்துரையாடல்கள் மூலம் தீர்வு எட்டப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையில் வடக்கு மாகாண சபைத் தேர்தலின் போது சர்வதேச கண்காணிப்பாளர்களின் பிரசன்னம் தேவை என்று தம்மிடம் தமிழ் கட்சிகள் கோருவதாக சொல்ஹெய்ம் தெரிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
பகிர்ந்தளிப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் – திகாம்பரம் எம்.பி.வலியுறுத்தல்-
மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளிலுள்ள 25 ஆயிரம் ஏக்கர் தரிசு நிலங்கள் வேலையற்ற இளைஞர்களுக்குப் பகிர்ந்தளிக்கும் போது அந்தந்தத் தோட்டங்களில் வாழுகின்ற இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பி.திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொகவந்தலாவ பிரதேச தோட்ட தலைவர்களுக்கான கூட்டமொன்றில் பேசிய போதே அவர் தெரிவித்துள்ளார்.
திகாம்பரம் தொடர்ந்தும் உரையாற்றுகையில், பெருந்தோட்டக் காணிகளைச் சொந்தம் கொண்டாடக்கூடிய உரிமை தோட்டத் தொழிலாளர் சமூகத்திற்குத் தான் உள்ளது. எமது மூதாதையர்கள் இந்த மண்ணின் வளத்திற்காக தமது உதிரத்தினையும் உயிரையும் அர்ப்பணித்து ஊட்டி வளர்ந்தவர்கள்.
இவ்வாறான வளம் கொண்ட நிலம் பகிர்ந்தளிக்கப்படுமானால் இந்தத் தொழிலாளர் வர்க்கத்தின் சந்ததியினருக்கு தான் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
எமது தோட்டங்களில் வேலையில்லாமல் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரத்திற்கான நல்லதொரு திட்டமாக இந்தத் தரிசு நிலப்பகிர்வு இருக்க வேண்டும்.
தோட்டப் பகுதிகளில் இனங்காணப் பட்டுள்ளதாக சொல்லப்படுகின்ற 25 ஆயிரம் ஏக்கர் பயிரிடப்படாத நிலங்கள் 12,500 இளைஞர்களுக்கு தலா இரண்டு ஏக்கர் வீதம் பிரித்துக் கொடுக்கப்படுமானால் இத் திட்டத்தில் அந்தந்த தோட்டங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும் என்று கூறியுள்ளார்.
அனர்த்தம் குறித்த அறிவிக்குமாறு கோரிக்கை-
நுவரெலிய மாவட்டத்தில் மண்சரிவு மற்றும் கடுங் காற்றுடனனான நிலமை தொடரும் பட்சத்தில் அனர்த்திற்கு உள்ளாகும் மக்கள் தமது பிரதேச கிராம சேவையாளர்களுக்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அறிவிக்கும் சந்தர்ப்பத்தில் அவர்களுக்கான உதவிகளை தங்களால் வழங்க முடியும் என நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் டி பி ஜீ குமாரசிறி தெரிவித்துள்ளார்.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger