ஞானசார தேரர் ஐயா அவர்களுக்கு,
கனடாவிலிருந்து Gowreeth எழுதிக் கொள்வது,……….
அண்மைக்கலத்தில் உருவாக்கப்பட்ட பொதுபலசேனா அமைப்பானது இலங்கையில் வாழும் அனைத்து சிங்கள மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதா? அல்லது முற்போக்கு மனம் படைத்த ஓரிரு சிங்க்களவர்களால் மட்டும் அமைக்கப்பட்டதா?
தங்களுடைய அமைப்பின் உண்மையான சேவை அல்லது அந்த அமைப்பின் உண்மையாண நோக்கம் என்ன?
வெறுமனே கிறிஸ்தவ, இந்து மற்றும் முஸ்ஸீம் சமய வாதிகளுடன் சண்டை போடுவதா அல்லது அனைத்து சமயங்களுடனும் ஒற்றூமையை வளர்ப்பதா எது முக்கியம்? புத்த மதத்தை அல்லது அம்மதத்தில் இவற்றையா பறை சாற்றுக்கின்றது?
இலங்கை நாடு அந் நாட்டில் வாழும் அனைவருக்கும் சொந்தமானது. அந் நாடு உங்கள் அமைப்புக்கு மட்டும் சொந்தமானது அல்ல.
வெறுமனே மற்றய மதத்தலைவர்களுடன் சண்டை போடுவதை நிறுத்தி விட்டு, அந்த நாட்டுக்கு எந்த விதத்தில், உதவ முடியுமோ அதனைச் செய்ய முயற்சி எடுக்கவும். முயற்சியென்பது வெÚமனே புத்த மதத்தை பாதுகாப்பது அல்ல.
இலங்கை நாடு, எப்போதுமே கலாச்சாரத்தை பின்பற்றியே வந்தது. இப்போது அங்குள்ள கலாச்சாரம் எதை பின்பற்றுகின்றது? அண்மைக்காலமாக அங்கு கொலை,கொள்ளை, கற்பழிப்பு மற்றும் நீதிமுறை கேடுகளே அதிகம் நடக்கின்றன. இதுவா உங்கள் அமைப்பு உருவாகியதன் பலன்பேறு? அல்லது மேற்குறியவற்றை ஊக்கப்படுத்துவது உங்கள் அமைப்பா?
கலாச்சாரம் அல்லது அந்நாட்டு பண்பாடு சீரலிவது பற்றி உங்கள் அமைப்பு எப்போதாவெதேனும் எதுவாயினும் பேசியிருக்கின்றதா அல்லது அதை பாதுகாக்க எதுவாயினும் முடிவெடுத்திருக்கின்றதா?
உங்கள் அமைப்பானது புத்த மதத்தை பாதுகாக்கின்றது என அடிக்கடி கூறிக்கொள்கின்றீர்கள், ஆனால் அந்த நாட்டை கொச்சைப்படுத்துவதே உங்கள் மதத்தை பின்பற்றுபவர்கலாலேயே அதிகம் நடக்கின்றன. இவற்றை பாதுகாப்பதை உங்கள் அமைப்பு முடிவெடுக்காமல், வெறுமனே ஏன் வேறு மதத்தவர்களோடு அல்லது இனத்தவர்களோடு சண்டை போடுகின்றீர்கள்? இது உங்கள் அமைப்பிற்கு வெட்கமாக அல்லது கேவலமாக தொ¢யவில்லையா?
முதலாவது நீங்கள் உங்களைத் திருத்துங்கள், அதன் பின் மற்றவர்களை திருத்த முடியும்……
Post a Comment