போலி மருத்துவர்களுக்கு சட்ட நடவடிக்கை / கொள்ளையாளர்கள் கைது செய்யப்படவில்லை

 

போலி மருத்துவர்களுக்கு சட்ட நடவடிக்கை-
இலங்கையில் தொழில்பட்டு வரும் போலி மருத்துவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கமும் இணைந்து இது குறித்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான சட்ட மூலம் ஒன்று விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
போலி மருத்துவர்களாக இயங்கும் பலர், மருத்துவ சான்றிதழ்கள் எதனையும் பெறாத நிலையில், போலியான வாசகங்களைக் கொண்ட அறிவித்தல் பலகைகளை காட்சிப்படுத்தி தமது சட்ட விரோத நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் நிஹால் டீ சோசா குறிப்பிட்டுள்ளார்.
புதிய உத்தேச சட்டத்திற்கு அமைய இப்படியான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு ஐந்து வருட வரையிலான சிறைத் தண்டனை வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சட்டத்திற்கு அமைய இப்படியான போலி மருத்துவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் போது, குற்றவாளியாக காணப்படுபவர்களுக்கு 5 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரையிலான அபராதம் மட்டுமே வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கொள்ளையாளர்கள் கைது செய்யப்படவில்லை- 
அண்மையில் ஏக்கலை பிரதேசத்தில் இடம்பெற்ற 75 லட்சம் ரூபா கொள்ளை சம்பவத்தால் பாதிக்கப்பட்டிருந்த ஆடைத் தொழிற்சாலையின் முகாமைத்துவ பணிப்பாளர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
மாரடைப்பு காரணமாக நேற்று இரவு நீர்கொழும்பு மாவட்ட மருத்துவ மனையில்இ அனுமதிக்கப்பட்ட போது அவர் உயிரிழந்திருந்ததாக மருத்துவ மனை தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் நீர்கொழும்பு கதிரான பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளைய தினம் நடைபெறவிருந்த தமது மகளின் நற்காரியம் ஒன்றிற்காக வங்கி ஒன்றில் இருந்து பணத்தைப் பெற்று மோட்டார் சைக்கிலில் பயணித்துக் கொண்டிருந்த போதுஇ பணம் கொள்ளையிடப்பட்டது.
வான் ஒன்றில் பயணித்த ஐந்து ஆயுததாரிகள் கடந்த 28ஆம் திகதி இந்த கொள்ளைச் சம்பவத்தை மேற்கொண்டனர்.
கொள்ளைச் சம்பவம் இடம்பெற்று 10 நாட்கள் கடந்துள்ள நிலையில்இ இதுவரை எந்தவித சந்தேக நபர்களும் கைது செய்யப்படவில்லை.
ஜாஎல காவல்துறை மற்றும் பேலியகொட குற்றத்தடுப்பு விசாரணை பிரிவினர் இணைந்து விசாரணைகளை மேற்கொள்வதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் புத்திக சிரிவர்தன தெரிவித்துள்ளார்.
 

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger