தாய்லாந்தைச் சேர்ந்த பௌத்த மத துறவிகள் சிலரின் ஆடம்பர வாழ்க்கை தொடர்பான காணொளியொன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த காணொளியில் தனி நபருக்குச் சொந்தமான உல்லாச விமானமொன்றில் துறவிகள் பயணம் மேற்கொள்கின்றமை காட்டப்பட்டுள்ளது.
இதில் துறவியொருவர் ஏவியேடர் சன்கிளாஸ் அணிந்துள்ளதுடன் வயர்லெஸ் ஹெட்போன், டிசைனர் பை என ஆடம்பரப் பொருட்களை உபயோகின்றமையும் காணொளி மூலம் வெளியாகியுள்ளது.
உலகம் பூராகவும் உள்ள பல பெளத்த மத துறவிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதேவேளை குறித்த காணொளியில் தோன்றும் துறவிகள் எதிர்காலத்தில் இவ்வாறு நடந்துகொள்ளக் கூடாதென பௌத்தத்திற்கான தேசிய அலுவலகத்தின் பொதுப் பணிப்பாளர் நொபாரட் பென்ஞாவடானு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Post a Comment