மாலைதீவு பிரஜை கைது / ஆப்கானிஸ்தான் பிரஜையை காணவில்லை / உயர் நீதிமன்றத்தின் நிலைப்பாடு சபாநாயகருக்கு / இலங்கை மக்கள் சீனாவுக்கு அடிமைகளாகும் நிலை

 

மாலைதீவு பிரஜை கைது-
வீசா இல்லாமல் நாட்டில் தங்கியிருந்த மாலைதீவு பிரஜை ஒருரவர் கண்டி, அலவத்துகொட, மாவத்துபொல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
அலவத்துகொட பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் படி இந்நபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரை கண்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை அலவத்துகொட பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் பிரஜையை காணவில்லை-
நீர்கொழும்பு, எத்துகால கடற்பரப்பில் குளிக்கச் சென்ற ஆப்கானிஸ்தான் பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி காணாமற் போயுள்ளார்.
31 வயதான ஆப்கானிஸ்தான் பிரஜை சுற்றுலா வீசாவில் இலங்கை வந்து 3 எத்துகால பிரதேச ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தார்.
இதேவேளை எபலியகோட, திகலவத்த பிரதேசத்தில் உள்ள நீர் நிலை ஒன்றில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த நபர் படலங்கட திகலவத்த பிரதேசத்தில் வசித்து வந்த 57 வயதான ஒருவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பலாங்கொட, ருஸ்ஸகல பிரதேசத்தில் குளு ஓயாவிற்கு அருகில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பலாங்கொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த நபர் அதே பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதான ஒருவர் என தெரிய வந்துள்ளது.
உயர் நீதிமன்றத்தின் நிலைப்பாடு சபாநாயகருக்கு-
வடக்கில் இடம்பெயர்ந்த மக்களை மீண்டும் பதிவு செய்து, அவர்களுக்கு வாக்குரிமை வழங்குவது தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த விசேட சட்டமூலம், அரசியல் அமைப்பிற்கு ஏற்றதா? இல்லையா? என்பது தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவினால் குறித்த சட்டமூலம் தொடர்பான நீதிமன்றத்தின் நிலைப்பாடு குறித்த அறிய கடந்த தினத்தில் உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதனை தொடரந்து அது பிரதம நீதியரசர் உள்ளிட்ட மூவரடங்கிய நீதிபதிகள் குழு இதனை விசாரணை செய்தது. இதனை தொடர்ந்தே நீதிமன்றத்தில் நிலைப்பாடு சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி நிறைவடைந்த யுத்ததிற்கு முன்னர் இவர்கள் இடம்பெயர்ந்ததாக, ஜனாதிகதி தாக்கல் செய்திருந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்ததது.
இதனிடையே, ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தனவின் மறைவுக்கு பின்னர் இடைவெளியான வெற்றிடத்திற்கு மேல்மாகாண அமைச்சர் அஜித் மானப்பெறும இன்று சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமானம் செய்துக் கொள்ளவுள்ளார்.
இன்று மாலை நாடாளுமன்றம் கூடும் போது அவர் சத்தியபிரமானம் செய்துக் கொள்ளவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை மக்கள் சீனாவுக்கு அடிமைகளாகும் நிலை-
இலங்கையில் சகல மக்களும் சீனாவின் அடிமைகளாகும் நிலை தோன்றியுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ச அத்தநாயக இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சீனா இலங்கைக்கு நிபத்தனையின் அடிப்படையிலேயே கடனுதவிகளை வழங்குகின்றது. நுரைச்சோலை அனல்மின்நிலைய கட்டுமான பணிகளை நிறைவு செய்துக் கொள்ள முடியாத அரசாங்கம், சீன வங்கியிடம் உதவி கோரியது.
அந்த கடனை திரும்பிச் செலுத்த காலதாமதமானதால் நுரைச்சோலை திட்டத்தை தமது கட்டுப்பாட்டுக்கு கீழ் கொண்டுவர யோசனை கூறியுள்ளது.
இவ்வாறு அனைத்து தேவைகளுக்கும் நிபந்தனையில் கீழ் அரசாங்கம் சீனாவிடம் செல்கிறது. இதனால் இலங்கை குடிமக்கள் அனைவரும் சீனாவின் அடிமைகளாகும் அபாயம் தோன்றியுள்ளது.
 

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger