பொதுபலசேனாவின் வருடாந்த மாநாடு / இருதய சத்திர சிகிச்சை இயங்குகின்றது / நுவரெலியா: மாட்டிறைச்சி முற்றாகத் தடை / வாக்காளர் பதிவேடுகளை பொதுமக்கள் பார்வையிட வசதி

 

பொதுபலசேனாவின் வருடாந்த மாநாடு 
பொதுபலசேனாவின் வருடாந்த மாநாடு எதிர்வரும் 15ஆம் திகதி பதுளை வலீஸ் பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இம்மாநாட்டின் போது 13ஆவது அரசியல் திருத்த சட்டத்தை இரத்துச் செய்ய வேண்டுமென்ற பிரேரணை முன் வைக்கப்பட்டு தீர்மானமாக ஏற்றுக் கொள்ளப்படவுள்ளதென தெரிவிக்கப்படுகிறது.
இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாநாட்டின் ஏற்பாட்டாளர் மேற்கொண்டு வருகின்றார்.
இருதய சத்திர சிகிச்சை இயங்குகின்றது- 
கொழும்பு கோட்டே ஜயவர்த்தனபுர மருத்துவமனையின் இருதய சத்திர சிகிச்சை பிரிவு மூடப்பட்டதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அந்த மருத்துவமனையின் பணிப்பாளர் சவின்த கமகே வெளியிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக பல்வேறுப்பட்ட தரப்பினரால் இது தொடர்பான விமர்சனங்கள் வெளியிடப்பட்டிருந்தன.
எவ்வாறாயினும், இருதய சத்திர சிகிச்சையோ அல்லது வேறு எந்த சத்திர சிகிச்சைகளோ நிறுத்தப்படவில்லை எனவும் சிறீ ஜயவர்த்தனபுர மருத்துவமனையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
நுவரெலியா: மாட்டிறைச்சி முற்றாகத் தடை 
2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மாடுகள் அறுப்பதையும் மாட்டிறைச்சி விற்பனை செய்வதையும் முற்றாகத் தடை செய்ய நுவரெலியா மாநகர சபை தீர்மானித்துள்ளது.
நுவரெலிய மாநகர சபைக்கு மேற்படி பிரேரணை முன் வைக்கப்பட்டுள்ளதுடன் மாநகர சபை மேயர் பிரதி மேயர் உட்பட பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரவளித்ததால் வாக்கெடுப்பு இன்றி பிரேரணை நிறைவேறியது.
வாக்காளர் பதிவேடுகளை பொதுமக்கள் பார்வையிட வசதி-
பாடசாலைகளில் முதலாம் ஆண்டுக்கு மாணவர்களை சேர்ப்பதற்காக கடந்த ஐந்து ஆண்டுகளுக்கான வாக்காளர் பதிவேடுகளை நாடு முழுவதுமுள்ள கிராம சேவகர் அலுவலகங்களிலும் பிரதேச அலுவலகங்களிலும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளதால் அங்கிருந்து பொதுமக்கள் பெற்றுக் கொள்ள முடியுமென தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
2014 ஆம் ஆண்டு அரசாங்க பாடசாலைகளில் முதலாம் ஆண்டுக்கு மாணவர்களை சேர்ப்பதற்கு 5 ஆண்டுகளுக்கான வாக்காளர் பதிவேட்டு பிரதியைப் பெற்றுக் கொள்வதற்காக பெருந்தொகையானோர் தேர்தல் அலுவலகங்களுக்கு வருவதால் திணைக்களத்தின் அன்றாட நடவடிக்கைகள் பாதிப்படைகின்றன.
உங்கள் பிரதேச செயலகத்தில் அல்லது உங்கள் பிரிவு கிராம சேவர் அலுவலகங்களில் திங்கள் வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் காலை 8.50 மணி முதல் 12.00 மணிவரை இந்த பிரதிகளைப் பெற முடியுமெனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger