மனைவியை காலால் உதைத்த கணவருக்கு, மனைவி கத்திக்குத்து / தமிழ் வர்த்தகரிடம் கோடி ரூபா கொள்ளை: பிரதான சந்தேகநபர் விமான நிலையத்தில் கைது

 

மனைவியை காலால் உதைத்த கணவருக்கு, மனைவி கத்திக்குத்து-
திருகோணமலை மொறவௌ பொலிஸ் பிரிவில் பெண் ஒருவர் தனது கணவரை கத்தியால் குத்திய சம்பவமொன்று இன்றுகாலை இடம்பெற்றுள்ளது.
கணவன் – மனைவிக்கு இடையில் இடம்பெற்ற பிரச்சினையில் மனைவி கணவரை கத்தியால் குத்தியுள்ளார்.
பின்னர் பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்திற்கு அழைத்து கணவர் தன்னை தாக்குவதால் காப்பாற்றுமாறு வேண்டியுள்ளார்.
உடனே குறித்த இடத்திற்குச் சென்ற மொறவௌ பொலிஸார் கத்திக்குத்துக்கு இலக்கான கணவரை மீட்டு மகதிவுல்வௌ பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக அவர் திருகோணமலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சிவில் பாதுகாப்பு படை வீரரான டபிள்யூ.சம்பத் (24 வயது) என்பவரே கத்திக் குத்துக்கு இலக்காகியுள்ளார்.
வயிற்றில் 08 மாதக் குழந்தையுடன் இருக்கும் தன்னை கணவர் காலால் உதைத்ததாகக் கூறும் மனைவி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
தமிழ் வர்த்தகரிடம் கோடி ரூபா கொள்ளை: பிரதான சந்தேகநபர் விமான நிலையத்தில் கைது- 
தமிழ் வர்த்தகரிடம் கோடி ரூபாய் கொள்ளையடித்ததாக கூறப்படும் பிரதான சந்தேக நபரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளதாக கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளனர்.
நீதிமன்றத்தினால் பெற்றுக் கொள்ளப்பட்ட பிடியாணையின் பிரகாரமே குறித்த சந்தேநபர் நேற்று கைது செய்து செய்யப்பட்டதாகவும், கொள்ளை இடம்பெற்ற தினமே குறித்த நபர் நாட்டை விட்டு தப்பியோடி விட்டதாகவும் அந்த பிரிவினர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
மேற்படி வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதவான் குற்றப்புலனாய்வு பிரிவினர் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட எட்டு சந்தேக நபர்களில் பொலிஸார் மூவர் உட்பட ஆறுபேர் நீதிமன்றத்தினால் அண்மையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களையும் எதிர்வரும் 12 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான் மேற்படி வழக்கையும் அன்றைய தினத்திற்கே ஒத்தி வைத்தார்.
வெள்ளவத்தையில் வெளிநாட்டு நாணயமாற்று நிலையத்தை நடத்துகின்ற கணபதிப்பிள்ளை தேவநேஷ்வரன் கொழும்பு, கொம்பனி வீதியிலுள்ள சம்பத் வங்கியிலிருந்து கோடி ரூபா வெளிநாட்டு பணத்தை பெப்ரவரி 12 ஆம் திகதி எடுத்துக் கொண்டு சென்ற போதே இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றது.
சம்பத் வங்கியில் பணத்தை எடுத்துக் கொண்டு நவம் மாவத்தையூடாக வானில் சென்றுக் கொண்டிருந்த போது போக்குவரத்து பொலிஸ் சீருடையில் நின்றுக் கொண்டிருந்த ஒருவர் வானத்தை நிறுத்தினார்.
வாகனம் நிறுத்தப்பட்டதும் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பென்டர் வாகனத்திலிருந்து நால்வர் இறங்கினர், அவர்கள் நால்வரும் என்னையும் எனது வாகனத்தின் சாரதியையும் டிப்பென்டர் வாகனத்திற்குள் பலவந்தமாக தள்ளி ஏற்றிக் கொண்டுச் சென்றதுடன்,
பணத்தை அபகரித்துக் கொண்டு, கோட்டை பகுதியிலுள்ள பாழடைந்த இடத்தில் தங்களை விட்டுவிட்டுச் சென்று விட்டனர் என்று அவர் நீதிமன்றத்தில் விபரித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதேவேளை கொள்ளையடிக்கப்பட்ட ஒருகோடி ரூபாவிலிருந்து 35 இலட்சம் ரூபா மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.
இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் தலைவராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் உபாலி தர்மதாஸ இன்று நியமிக்கப்பட்டுள்ளார். காமினி செனரத்தின் இடத்திற்கு நியமிக்கப்பட்ட உபாலி தர்மதாஸ பிரபல வர்த்தகர் ஆவார்.
 
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger