அரசின் தீர்மானத்திற்கு எந்த வகையிலும் அடிபணிய போவதில்லை -வாசு-
அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எந்த வகையிலும் அடிப்பணிய போவதில்லை எனவும் அத்துடன் அரசாங்கத்தை சிக்கிலில் மாட்டிவிட போவதில்லை எனவும் வாசுதேவ கூறியுள்ளார்.
அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எந்த வகையிலும் அடிப்பணிய போவதில்லை எனவும் அத்துடன் அரசாங்கத்தை சிக்கிலில் மாட்டிவிட போவதில்லை எனவும் வாசுதேவ கூறியுள்ளார்.
ஜனாதிபதியினால், அண்மையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, மாகாண சபைகளின் அதிகாரங்களில் திருத்தங்கள் மேற்கொள்வது தொடர்பில் ஒரே நிலைப்பாட்டில் இருக்குமாறு வழங்கிய ஆலோசனை தனக்கு பொருந்தாது என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
மாகாண சபை உள்ளிட்ட 13வது அரசியல் அமைப்புத் திருத்தம் தொடர்பாக தாம் கொண்டுள்ள நிலைப்பாட்டை விட்டு கொடுக்க தனக்கு எந்த எண்ணமும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
தாம் கொண்டுள்ள நிலைப்பாட்டில் தொடர்ந்தும் இருக்க போவதாகவும் தான் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் தொடர்புடையவர் அல்ல எனவும் தான் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
இடம்பெயர்ந்தோர் வாக்காளர் இடாப்பில் பதியும் நடவடிக்கை நிறைவு-
வாக்காளர் இடாப்பில் இடம்பெயர்ந்த வடக்கு, கிழக்கு மாகாண மக்களை உள்வாங்குவதற்காக வழங்கப்பட்டிருந்த காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்ததாக தேர்தல் திணைக்களம் தெரிவித்தது.
வாக்காளர் இடாப்பில் இடம்பெயர்ந்த வடக்கு, கிழக்கு மாகாண மக்களை உள்வாங்குவதற்காக வழங்கப்பட்டிருந்த காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்ததாக தேர்தல் திணைக்களம் தெரிவித்தது.
இவ்வாறு விண்ணப்பித்த இடம்பெயர்ந்த வாக்காளர்களின் விபரங்கள் இன்று முதல் அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் தொங்க விடப்பட்டிருக்கும் என மேலதிக தேர்தல் ஆணையாளர் எல்.எம்.எல்.ஏ. ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தமது பெயர்களை பதிவு செய்ய முடியாத வாக்காளர்களுக்கு இன்று முதல் ஜுலை 5ம் திகதி வரை மேன் முறையீடு செய்வதற்கு காலக்கெடு வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து வாக்காளர் இடாப்பில் பெயரை பதிவு செய்ய முடியாத வடக்கு, கிழக்கு பிரதேச மக்களுக்காக வாக்காளர் பதிவு விசேட ஏற்பாடுகள் திருத்த சட்டமூலம் அண்மையில் பாராளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
இதன்படி 2009 ஆம் ஆண்டின் பின் தம்மை பதிவு செய்ய முடியாது போன வாக்காளர்களுக்காக தம்மை பதிய ஒரு வாரகாலம் அவகாசம் வழங்கப்பட்டது.
இதன்மூலம் வடக்கு, கிழக்கைச் சேர்ந்த இடம் பெயர்ந்த 15 ஆயிரத்திற்கும் அதிகமான மக்களுக்கு வாக்களிக்க அவகாசம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செப்டம்பர் 21 அல்லது 23 ஆம் திகதி வடமாகாண சபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இடம்பெயர்ந்த மக்களுக்கு வாக்குரிமை பெற்றுக்கொடுக்க துரிதமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
Post a Comment