மாட்டிறைச்சிவாதம்!







 கடந்த வெசாக் பண்­டிகை தினத்­தன்று தலதா மாளி­கையின் முன்­னி­லையில் பௌத்த பிக்கு ஒருவர் மாட­றுப்­புக்கு எதி­ராக தீக்­கு­ளித்துக் கொண்ட சம்­பவம் தெரிந்­ததே. இது மதத்­துக்­காக செய்த உயிர்த்­தி­யாகம் என்­ப­தாக ஹெல உறு­மய கட்சி தெரி­வித்­தி­ருந்த நிலையில் தற்­பொ­ழுது தேசப்­பற்­றுள்ள அர­சியல் எழுத்­தாளர் ஒருவர் குறித்த பௌத்த பிக்­குவின் செயலை, மிரு­க­வதைக்கெதி­ரான உன்­ன­த­மா­ன­தொரு அர்ப்­பணம் என்­ப­தாக பத்­தி­யொன்றில் வர்­ணித்­தி­ருந்தார். பால்மா இறக்­கு­ம­திக்­காக வேண்டி நாடு கூடு­த­லான நிதித் தொகையை செல­வ­ளிக்க வேண்­டி­யுள்­ள­தனால் நாட்­டுக்குத் தேவை­யான பாலை இங்­கேயே உற்­பத்தி செய்து கொள்ள வேண்டும் என்­ப­தா­கவும் அத்­த­கைய தேசப்­பற்­றுள்­ள­வர்கள் குர­லெ­ழுப்­பு­கி­றார்கள். நாட்டில் வலு­வ­டைந்து வரு­கின்ற மாட்­டி­றைச்சி எதிர்ப்புக் கோட்­பாடு நாட்டின் பால் உற்­பத்­தியை பெரிதும் பாதித்து விடும் என்­பது அவர்­க­ளுக்கு புரி­யா­துள்­ளது.



இறந்தே பிறக்கும் கோழிகள்
நாட்டின் சகல மதத்­தி­னரும் சர்வ மதத்­த­லை­வர்­களும் வேறு­பா­டின்றி கோழி­யி­றைச்சி, முட்­டை­களை புசித்து வரு­கின்­றனர். அத்­தோடு சகல இனத்தைச் சேர்ந்த மக்­களும் கோழி வளர்ப்பில் ஈடு­பட்டு வரு­கின்­றனர். கோழியும் ஒரு உயிர்ப்­பி­ராணி. கோழிகள் அறுக்­கப்­ப­டு­கின்ற விதமும் அவ்­வ­ளவு முறை­யா­ன­தல்ல. கோழி அறுக்­கப்­பட்ட பின்னர் அது இறக்கும் வரையில் துடி துடிப்­பதைப் பார்க்கும் ஒரு­வ­ருக்கு கவ­லையே ஏற்­படும். இந்­நி­லையில் பௌத்­தர்கள் உட்­பட சகல மதத்­த­வர்­களும் கோழி­யி­றைச்­சியை ஆகா­ரத்­திற்கு எடுக்­கின்­றனர். கோழி­யி­றைச்சி உண்­ணா­த­வர்கள் ஒரு சிலர் நாட்டில் காணப்­பட்­டாலும் அது மாட்­டி­றைச்சி உண்­ப­வர்­களின் தொகையைக் காட்­டிலும் குறை­வாகும். இன்று கிராமப் புறங்­க­ளி­லுள்ள சிறிய கடை­க­ளிலும் கூட கோழி­யி­றைச்சி விற்­கப்­ப­டு­கின்­றது. கோழி முட்டை இன்று இலங்­கையில் முக்­கிய உண­வாக உள்­ளது. நாட்டில் முட்­டை­க­ளுக்­கான தட்­டுப்­பாடு நில­வு­கின்ற பொழுது அவை வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து இறக்­கு­மதி செய்­யப்­ப­டு­கின்­றன. நாட்டில் கோழி­யி­றைச்சி மற்றும் முட்­டை­களை புசித்து வரு­கின்ற ஒரு சமூகம் காணப்­ப­டு­வ­தனால் அதி­க­ள­வி­லான மக்கள் கோழி வளர்ப்­பினை ஜீவ­னோ­பா­ய­மாகக் கொண்­டுள்­ளனர்.
கோழி அறுப்பை தடை செய்­தாலோ அல்­லது கோழி­யி­றைச்சி முட்டை உற்­பத்­தி­யி­லி­ருந்து மக்கள் விலகி நின்­றாலோ நாட்டின் கோழி வளர்ப்பில் அர்த்­த­மில்­லாமல் போய்­விடும். இலங்­கையில் கோழியை விட மாட்டின் நிலைமை வித்­தி­யா­ச­மாகும். பசுப்பால் அருந்­து­வதில் கருத்து வேறு­பாடு இல்லை. நாட்டின் சகல இன மக்­களும் அதனை அருந்­து­கின்­றனர். பசுப்பால் அருந்­தா­விட்­டாலும் இறக்­கு­மதி செய்­யப்­பட்ட பால்­மா­வை­யேனும் பயன்­ப­டுத்தி வரு­கி­றார்கள். அனை­வ­ருக்கும் பால் அவ­சி­ய­மாகும். அதில் கருத்து வேறு­பாடு இல்லை. எமக்குத் தேவை­யான பாலை நாமே இங்கு உற்­பத்தி செய்து கொள்ளும் போது பால் இறக்­கு­ம­திக்­காக செல­வ­ழிக்­கின்ற தொகையை பிறி­தொரு தேவைக்­காக வேண்டிப் பயன்­ப­டுத்­தலாம். மாடு­களைப் பரா­ம­ரிக்க சிறந்த இட வச­தி­களைப் பெற்று பயிர் செய்­யப்­ப­டாத நிலங்­களை புல் நிலங்­க­ளாக மாற்­றி­ய­மைத்து பசு மாடு­களைப் போசிக்­கின்ற போது பால் உற்­பத்­தியை சிறந்த இலா­ப­க­ர­மான தொழில் முயற்­சி­யாக மாற்­றி­ய­மைக்­கலாம்.

இறைச்­சி­யில்­லாமல் பால் இருக்க முடி­யுமா?
மாட்­டி­றைச்சித் தொழில் துறை­யொன்று நாட்டில் காணப்­ப­டாமல் பால் உற்­பத்­தியை இலா­ப­க­ர­மா­ன­தொரு தொழி­லாக மாற்ற முடி­யாது. இறைச்­சிக்­காக இல்­லாமல் முட்­டைக்­காக மாத்­திரம் கோழி வளர்ப்­ப­தனால் எவ்­விதப் பொரு­ளா­தார நல­னையும் பெற்றுக் கொள்ள முடி­யாது போகும். இறைச்­சிக்­காகப் பயன்­ப­டுத்­தாமல் பால் உற்­பத்­திக்­காக மாத்­திரம் மாடு­களை வளர்க்கும் போது அது பொரு­ளா­தார ரீதியில் எவ்­விதப் பிர­யோ­ச­னத்­தையும் பெற்றுத் தரு­வ­தில்லை. நாடு பால் உற்­பத்­தியில் தன்­னி­றைவு பெறு­வ­தற்கு நாளொன்­றிற்கு 20–25 லீற்­ற­ருக்கு இடைப்­பட்ட பாலை கறக்க முடி­யு­மாக உள்ள சிறந்த பசுக்­களைக் கொண்ட பண்­ணையைப் பரா­ம­ரிக்க வேண்­டி­யுள்­ளது.

முத­லீடு செய்­வ­தற்­கேற்ப உரிய இலா­பத்தைப் பெற்றுக் கொண்டால் தான் மக்கள் சிறந்த பால் பண்­ணைக்குத் தேவை­யான மாடு­களை பரா­ம­ரிப்­பார்கள். உயர் வர்க்­கத்­தி­லான 100 பசுக்­களைக் கொண்ட பாற் பண்­ணை­யொன்றை ஒருவர் ஆரம்­பித்தார் என்று வைத்துக் கொள்வோம். அதில் ஒரு பசு­விற்கு ஒரு இலட்சம் அல்­லது இரண்டு இலட்­சத்தை அண்­மித்த தொகையை செல­வ­ழித்­து­முள்ளார். பசுக்­க­ளுக்கு மூன்று வய­தாகும் போது அவை குட்டி ஈன்று பால் கறக்க முடி­யு­மான நிலை உரு­வா­கி­றது. ஆனால் அவ­ருக்கு அப்­ப­சுக்­களில் இருந்து ஏழு வருட காலத்­திற்கு மாத்­திரம் தான் பால் கறக்க முடி­யு­மா­கின்­றது. அதன் பின்னர் அவை பால் கறக்க முடி­யாத, குறை­வாகப் பால் தரு­கின்ற, பொரு­ளா­தார ரீதியில் நஷ்­டத்தை உண்­டு­பண்­ணு­கின்ற பசுக்­க­ளா­கின்­றன. இந்­நி­லையில் அந்­நபர் 100 பசுக்­க­ளையும் என்ன செய்வார்? அவை சாகும் வரை­யிலும் பரா­ம­ரிக்க வேண்­டுமா? அவ்­வாறு மேய்த்து வந்தால் அவ­ரது பால் உற்­பத்தி இலா­ப­மற்­றதாய் போய்­விடும். ஒரு பசு­வி­னு­டைய நிறை 500 கிலோ கிராம் எனக் கரு­தி­னால் இறைச்­சிக்­காக வேண்டி அதனை விற்­பனை செய்­கின்ற போது ஒரு பசுவின் மூலம் 75,000 ரூபா­வினை உழைக்­கலாம். அவ்­வாறு 100 பசுக்­க­ளாலும் 75 இலட்­சத்தை உழைக்­கலாம். பிர­யோ­சனம் தராத 100 பசுக்­களை விற்று 75 இலட்சம் ரூபா ஆதா­யத்தைப் பெறாமல் அவ­ரது பாற் பண்­ணையை அவர் எப்­படி இலா­ப­க­ர­மா­ன­தாக மாற்­றி­ய­மைப்பார். நாட்டில் இறைச்சித் தொழிற் துறை­யொன்று இருந்து வரு­வ­தால்தான் அத்­த­கைய மாடுகள் அதி­க­ளவில் விலை போகின்­றன. இறைச்­சிக்­காக வேண்டி மாட­றுப்­ப­தனை தடுப்­ப­தனால் நாட்டில் பாற் பண்ணை தொழிற்­துறை முற்­றாக இல்­லா­மல்­போய்­விடும்.

உணவுத் தீவி­ர­வாதம்

முன்­னைய சிங்­கள பௌத்­தர்கள் தீவி­ர­வாத எண்­ணங்­களைக் கொண்­டி­ருக்கவில்லை. அவர்கள் நீர்ப்­பா­சனத் திட்­டங்­களில் சூரர்­க­ளாகக் காணப்­பட்­டார்கள். குளங்­க­ளி­லி­ருந்து மீன் பிடித்­தார்கள். அதி­லி­ருந்து கிரா­மத்தின் விகா­ரை­க­ளுக்கும் வழங்­கி­னார்கள். மான்­களை வேட்­டை­யாடி எல்­லோ­ருக்கும் கொடுத்துச் சாப்­பிட்­டார்கள். வேட்­டை­யி­றைச்சி குரக்கன் ரொட்­டிக்­கான சிறந்த கறி­யாகக் காணப்­பட்­டது. தேவ­நம்­பிய தீஸ மன்னன் மான் வேட்­டை­யா­டிக் ­கொண்­டி­ருக்கும் போது மஹிந்த தேரர் மிகிந்­தலைக் குன்றின் மேல் வந்­தி­றங்­கி­ய­தாக மகாவம்சம் கூறு­கின்­றது. முதலாம் பராக்­கி­ர­ம­பாகு மன்னன் (1153--1186) மனை­வி­யையும் அமைச்­சர்­க­ளையும் வேட்­டைக்கு அழைத்துச் சென்­றுள்­ள­தாக சூல வம்சம் கூறு­கின்­றது.

ராவய பத்­தி­ரி­கையில் பணி­யாற்றி வரும் ஊழியர் ஒரு­வரின் மனைவி இரண்டு வரு­டங்­க­ளுக்கு முன்னர் நோய்­வாய்ப்­பட்டு இறந்து போனார். அவ­ருக்கு ‘சிறோ­சியா’ நோய் பீடித்­தி­ருந்­த­தாக வைத்­தி­யர்கள் கூறினர். கூடு­த­லாக மது அருந்­து­வதால்தான் அந்நோய் ஏற்­ப­டு­கின்­றது. ஆனால் வைத்­தி­யர்கள் இதற்கு மாற்­ற­மான கருத்தைக் கூறினர். சைவ உணவுப் பழக்­கத்தை கடை­பி­டித்து வந்­த­த­னா­லேயே அப் பெண்ணுக்கு அந்நோய் பீடித்­த­தாக வைத்­தி­யர்கள் தெரி­வித்­தனர்.

பிர­பல எழுத்­தாளர் ஒரு­வரின் மனைவி சைவ உண­வுப்­ப­ழக்­கத்தைக் கடை­ப்பி­டித்து வந்தார். அவர் சில காலம் சுக­வீ­ன­முற்று வந்த நிலையில் பிரான்­சுக்குச் சென்­றி­ருந்த போது அங்கு ஒரு வைத்­தி­ய­ரிடம் பரி­சோ­தித்துக் கொண்­டுள்ளார். வைத்­தியர் அவ­ரது உணவுப் பழக்­கத்தை கேட்­டி­ருந்­த­போது பல வரு­டங்­க­ளாக இறைச்சி உண­வு­களை தவிர்த்து மரக்­கறி உண­வு­களை மாத்­திரம் உட்­கொண்டு வந்­த­தாகத் தெரி­வித்­தி­ருந்தார். இறைச்­சியைத் தவிர்த்து முழு­மை­யாக சைவ உண­வுப்­ப­ழக்­கத்­திற்கு மாறி­ய­த­னா­லேயே இந்நோய் ஏற்­பட்­ட­தா­கவும் மீண்டும் இறைச்சி உண­வு­வ­கை­களை அன்­றாட உண­வு­களில் சேர்த்து வரு­மாறும் கூறி­யி­ருந்தார். அவர் வைத்­தி­யரின் ஆலோ­ச­னையை பின்­பற்றி வந்­த­தனால் தற்­போது நல்ல தேகா­ரோக்­கி­யத்­தோடு இருந்து வரு­வ­தா­கவும் குறித்த எழுத்­தாளர் என்­னிடம் கூறியி­ருந்தார்.

மாட்­டி­றைச்­சியும் இன­வா­தமும்
மாட்­டி­றைச்சி உண்­ப­வர்கள் சமூ­கத்­தி­லி­ருந்து ஒரங்­கட்­டப்­பட வேண்­டி­ய­வர்கள் என்­ப­தாக அந­கா­ரிக தர்­ம­பால கூறி­யுள்ளார். அவ­ரது மாட்­டி­றைச்சி எதிர்ப்­புக்குள் பிரித்­தா­னிய எதிர்ப்­பொன்று இருந்­த­துடன் அதனை விட முஸ்லிம் எதிர்ப்பு ஒன்றும் காணப்­பட்­டது. ஆங்­கி­லே­யர்­களும் மாட்­டி­றைச்­சியை சாப்­பிட்­டார்கள். கிறிஸ்­தவ சிங்­க­ள­வர்­களும் சில பௌத்­தர்­களும் மாட்­டி­றைச்­சியை சாப்­பிட்­டார்கள். அந­கா­ரிக தர்­ம­பால சிறு­பான்­மை­யி­னத்­த­வர்­க­ளையும் சிறு­பான்மை மதத்­த­வர்­க­ளையும் இழி­வா­கவும் தாழ்­வா­கவும் நோக்­கினார். முஸ்லிம் மக்கள் அவ­ரது கூடு­த­லான எதிர்ப்­புக்­க­ளுக்கு உட்­பட்­டி­ருந்­தார்கள். நவீன சிங்­கள இன­வா­தத்தின் ஸ்தாப­க­ராக அந­கா­ரிக தர்­ம­பா­ல­வினை அடை­யா­ளப்­ப­டுத்­தலாம். அவர் சிங்­கள இன­வா­தக்­ க­ருத்­துக்­க­ளுக்கு கூடுதல் முக்­கி­யத்­துவம் அளித்து அதனைப் போஷித்து சிங்­கள மக்­க­ளுக்கு மத்­தியில் பரப்­பினார். அவர் சிங்­கள மக்கள் மத்­தியில் விதைத்த முஸ்லிம் எதிர்ப்புக் கருத்­துக்கள், 1915 இல் சிங்­கள முஸ்லிம் கல­வ­ரத்­திற்கு வழி­கோ­லி­யது. மீண்டும் இது­போன்­ற­தொரு இனக்­க­ல­வ­ரத்­திற்குள் நாட்டைத் தள்ளி விடு­வ­தற்கு இன்­றைய முஸ்லிம் எதிர்ப்புச் சிங்­களக்  கடும்­போக்­கு­வா­திகள் முயற்­சித்துக் கொண்­டுள்­ளார்கள்.

1956 இல் மொழிப்­பி­ரச்­சினை ஏற்­பட்­ட­போது கடும்­போக்கு வாதத்தைக் கடை­பி­டிக்­காமல் தமி­ழர்­க­ளது விட­யங்கள் தொடர்பில் நாம் சாதா­ர­ண­மாக செயற்­பட்­டி­ருந்தால் பாரி­ய­தொரு அழிவை தடுத்­தி­ருக்­கலாம். சிங்­களக் கடும்­போக்கு வாதம் தமிழ் கடும்­போக்கு வாதத்தை போசித்­தது. இறு­தியில் தமிழ் சிங்­கள இனங்கள் தமிழ் மற்றும் சிங்­களக் கடும்­போக்குவாதத்­திற்­காக வேண்டி கூடு­த­லான இழப்­புக்­களைச் சந்­திக்க வேண்­டி­யேற்­பட்­டது. ஏற்­பட்ட சீர­ழி­வு­க­ளி­லி­ருந்தும் அனு­ப­வங்­க­ளி­லி­ருந்தும் பாடம் கற்றுக்­கொள்­ளாமல் தமிழர் பிரச்­சி­னைக்கு மேல­தி­க­மாக முஸ்லிம் பிரச்­சி­னை­யொன்­றையும் ஏற்­ப­டுத்த விளைந்தால் அது தமிழர் பிரச்­சி­னைக்­காக வேண்டி இழந்­ததை காட்­டிலும் கூடு­த­லான இழப்­புக்­க­ளுக்கு முகம்­கொ­டுக்க வேண்­டி­யேற்­படும். இந்­நி­லையை எளி­மை­யா­ன­தொரு உதா­ர­ணத்தின் மூலம் தெளி­வு­ப­டுத்­தலாம்.

முஸ்­லிம்­களை எதிர்ப்­பதன் விளைவு
இலங்­கையில் தமிழ் சிங்­கள இனங்­க­ளுக்­குள்ளால் உள்ள தொடர்­பு­களை வைத்துப் பார்க்கும் பொழுது சிங்­க­ள­வர்­க­ளுக்குள்  பெரும்­பான்­மை­யி­னத்­த­வர்கள் என்ற மனோ­நிலை இருந்­த­தோடு  சிறு­பான்­மை­யி­னத்­த­வர்கள் என்­கின்ற மனோ­நி­லையும் அவர்­க­ளிடம் குடி­கொண்­டி­ருந்­தது. தமி­ழர்­க­ளுக்­குள்­ளாலும் கூட சிறு­பான்­மை­யி­னத்­த­வர்கள் என்ற மனோ­நி­லையும் பெரும்­பான்­மை­யி­னத்­த­வர்கள் என்ற மனோ­நி­லையும் காணப்­பட்­டது. சிங்­க­ள­வர்கள் நாட்டின் பெரும்­பான்­மை­யி­னத்­த­வர்­க­ளாக இருந்­தாலும் வடக்­கி­லுள்ள தமி­ழர்­க­ளையும் தென்­னிந்­தியத் தமி­ழர்­க­ளையும் ஒன்­றாக இணைத்துப் பார்க்கும் போது சிங்­க­ள­வர்­க­ளுக்கு அவர்­களே சிறு­பான்­மை­யி­னர்­க­ளாகத் தென்­பட்­டார்கள். மறு­பு­றத்தில் தமி­ழர்­களை இலங்­கையில் சிங்­க­ள­வர்­க­ளோடு ஒப்­பிடும் போது சிறு­பான்­மை­யி­னர்­க­ளாகக் காணப் பட்டாலும் இந்­தி­யா­வோடும் உலகத் தமி­ழர்­களின் சனத்­தொ­கை­யோடும் இணைத்துப் பார்க்கும் போது சிங்­க­ள­வர்­களின் தொகையை விட கூடு­த­லாகக் காணப்­ப­டு­வ­தனால் தமி­ழ­ருக்குள் பெரும் ­பான்­மை­யினம் எனும் மனோ­நி­லையும் தோன்­றி­யி­ருந்­தது. இத்­த­கைய மனோ­பா­வங்கள் இனப்­பி­ரச்­சி­னையில் தாக்கம் செலுத்­தி­யி­ருந்­த­தனைக் காணலாம்.

உல­க­ளவில் தமி­ழர்­களின் சனத்­தொகை 79 மில்­லி­ய­னாகும். அத்­தொகை உலக சனத்­தொ­கையில் 1.14 வீத­மாகும். உலகில் தமி­ழர்­களைப் பெரும்­பான்­மை­யாகக் கொண்ட நாடு எதுவும் கிடை­யாது. உலகின் பல்­வே­று­பட்ட நாடு­களின் சனத்­தொ­கையின் சத­வீ­தத்தைப் பார்க்கும் பொழுது கூடு­த­லான தமிழ் மக்­களின் சத­வீத்தைக் கொண்ட நாடு இலங்­கை­யாகக் காணப்­ப­டு­கி­றது.  இலங்­கை­யி­லுள்ள தமி­ழர்­களின் சனத்­தொகை 18 வீத­மாகும். அடுத்து கூடு­த­லான தமிழர் சனத்­தொ­கையைக் கொண்ட நாடு மொரீ­ஸியஸ் ஆகும். அங்­குள்ள தமி­ழர்­களின் தொகை 8.01 வீத­மாகும். மூன்­றா­வது இடத்தில் மலே­ஷியா உள்­ளது. அங்­குள்ள தமி­ழர்­களின் எண்­ணிக்கை 7.2 வீத­மாகும். நான்­கா­வது நாடு சிங்­கப்­பூ­ராகும். அங்கு 7.1 வீத­ம­ள­வி­ளான தமி­ழர்கள் உள்­ளனர். ஐந்­தா­வது இடத்தில் இந்­தியா காணப்­ப­டு­கின்­றது. இந்­தி­யா­வி­லுள்ள தமி­ழர்­களின் சனத்­தொகை 5.63 வீத­மாகும். தமி­ழர்கள் வசிக்­கின்ற ஏனைய நாடு­களில் ஒரு வீதத்­திற்கும் குறை­வா­ன­வர்­க­ளாவே காணப்­ப­டு­கின்­றனர். மறு­பு­றத்தில் பார்க்கும் போது முழு உல­கிலும் உள்ள தமி­ழர்­களின் சனத்­தொ­கையில் 91 வீத­மா­ன­வர்கள் (7கோடியே 20 இலட்சம் பேர்)  இந்­தி­யா­வி­லேயே உள்­ளனர். அடுத்து கூடு­த­லான சனத்­தொ­கையைக் கொண்ட தமி­ழர்கள் இலங்­கை­யி­லேயே உள்­ளனர். அத்­தொகை 30 இலட்­ச­மாகும். அத்­தொ­கை­யா­னது உலகத் தமி­ழர்­களின் சனத்­தொ­கையில் 2.3 வீத­மாகும். மூன்­றா­வது இடத்தில் மலே­சியா உள்­ளது. அங்கு வசிக்­கின்ற தமி­ழர்­களின் சனத்­தொகை 18 இலட்­ச­மாகும். அது உலகத் தமி­ழர்­களின் சனத்­தொ­கையில் 1.42 வீத­மாகும்.

இனி எமக்கு முஸ்லிம் மக்­க­ளுடன் பிரச்­சி­னைப்­ப­டு­வ­தனால் ஏற்­ப­டு­கின்ற பார­தூ­ரத்தை சற்று பார்ப்போம். உலகத் தமி­ழர்­களின் சனத்­தொகை 79 மில்­லி­ய­னாகும் போது உலக முஸ்­லிம்­களின் சனத்­தொகை 1619 மில்­லி­ய­னாகக் காணப்­ப­டு­கின்­றது. இத்­தொ­கை­யா­னது உலகத் தமி­ழர்­களின் சனத்­தொ­கையின் அளவில் 20 மடங்­கையும் விட அதி­க­மாகும். தமிழ் மக்கள் உலக சனத்­தொ­கையில் 1.14 வீத­மாக இருக்கும் போது முஸ்லிம் மக்கள் உலக சனத்­தொ­கையில் 23 வீத­மாகக் காணப்­ப­டு­கின்­றனர்.

கிறிஸ்­தவ மதத்தைப் பின்­பற்­று­கின்­ற­வர்கள் உலக சனத்­தொ­கையில் 33 வீத­மா­ன­வர்­க­ளாக உள்­ளனர். கிறிஸ்­த­வர்­க­ளுக்கு அடுத்த இடத்தில் இஸ்­லா­மிய மதத்தைப் பின்­பற்­று­கின்­ற­வர்­களே உலகில் கூடு­த­லாகக் காணப்­ப­டு­கின்­றனர். முஸ்­லிம்கள் பெரும்­பான்­மை­யி­னர்­ளாக உள்ள நாடுகள் 49 ஆகும். நாட்டின் சனத்­தொ­கையில் 80 வீதத்­திற்கும் அதி­க­மான முஸ்­லிம்கள் உள்ள நாடுகள் 38 ஆகும். உலகில் கூடு­த­லான முஸ்லிம் சனத்­தொகை, அரபு நாடு­க­ளிலோ மத்­திய கிழக்கு நாடு­க­ளிலோ காணப்­ப­டு­வ­தில்லை. மாறாக தெற்கு மற்றும் தென்­கி­ழக்­கா­சிய நாடு­க­ளி­லேயே அதி­க­ள­வி­லான முஸ்­லிம்கள் உள்­ளனர். இவ்­வ­ல­யத்தில் மாத்திரம் ஒரு பில்­லி­ய­னுக்கும் அதி­க­ள­வி­லான முஸ்­லிம்கள் உள்­ளனர். உல­கி­லேயே கூடு­த­லான முஸ்லிம் சனத்­தொ­கையைக் கொண்ட நாடு இந்­தோ­னே­சி­யா­வாகும். அங்கு 204 மில்­லியன் முஸ்­லிம்கள் உள்­ளனர். அடுத்து பாகிஸ்தான். அங்கு 178 மில்­லியன் முஸ்லிம்கள் காணப்­ப­டு­கின்­றனர். மூன்­றா­வது இந் தியா­வி­லேயே கூடு­த­லான முஸ்­லிம்கள் காணப்­ப­டு­கின்­றனர். அங்கு 177மில்­லியன் முஸ்லிம் மக்கள் உள்­ளனர்.  நான்­கா­வது நாடு பங்­க­ளாதேஷ் ஆகும். அங்கு 148 மில்­லியன் முஸ்­லிம்கள் உள்­ளனர். சிங்­க­ள­வர்­களை விட அளவில் ஓர­ளவு பெரி­ய­வர்­க­ளாக இருந்­தாலும் உலக முஸ்லிம் மக்­களின் அள­வோடு ஒப்பிடும் போது உலகத் தமி­ழர்­களின் அளவு மிகவும் குறை­வாகும். அவ்­வா­றி­ருந்தும் தமிழ் சமூ­கத்­தோடு பிரச்­சி­னைப்­பட்­ட­தனால் ஏற்­பட்ட இழப்­புக்கள் ஏரா­ள­மா­ன­தாகும்.

நாம் அந்த அனு­ப­வத்­தி­லி­ருந்து முறை­யான பாடத்தைக் கற்­றுக்­கொள்­ளாமல் உல­க­ளவில் தமிழ் மக்­களைப் போன்று 20 மடங்­கையும் விட அதி­க­மா­க­வுள்ள முஸ்லிம் மக்­க­ளோடு பிரச்சினைப் பட்டுக் கொள்வதனால் அதற்காக நாம் செலுத்த வேண்டியேற்படுகின்ற இழப்புக்கள் மிக மிக அதிகமாகும் என்பதனை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

நன்றி: ராவய
தமிழில்: ஹெட்டி ரம்ஸி
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger