பொருளாதார நெருக்கடியை சமாளிக்க பிரான்ஸ் அரச மாளிகை வைன்கள் ஏலம் / அதிபர் பதவிக்கு மீண்டும் போட்டியிடப் போவதில்லை: சர்தாரி அறிவிப்பு

 

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க பிரான்ஸ் அரச மாளிகை வைன்கள் ஏலம்-
பொருளாதார நெருக்கடியை சமாளிக்க பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி மாளிகையிலுள்ள பழைமையான வைன்களை ஏலத்தில் விற்பனை செய்ய அந்நாட்டு அரசாங்கள் தீர்மமானித்துள்ளதாக தெரிவிக்ப்படுகின்றது.
ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆனால் பிரான்ஸ் மற்றும் ஜேர்மன் ஆகிய நாடுகள் ஓரளவு ஸ்திரமான நிலையில் காணப்படுவதாக நம்பப்பட்டது. இந்நிலையில் பிரான்ஸ் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருப்பது தெரியவந்துள்ளது.
ஏனைய நாடுகளைப் போல பிரான்ஸிலும் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளதுடன் தொழிற்சாலைகள் பலவும் மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில் அங்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை ஓரளவு சமாளிக்க பிரான்ஸ் ஜனாதிபதியின் அரச மாளிகையான எலிசியிலுள்ள பழைமையான வைன்களை ஏலம் விட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த உயர்ரக பழைமையான வைன்கள் அரச மாளிகைக்கு வரும் விருந்தினர்களுக்காக பரிமாறப்படும். இவ்வாறு பாரிமாறுவதற்கென அங்கு பல வருடங்கள் பழைமையான வைன்கள் கையிருப்பில் வைத்திருப்பது வழக்கம்.
இதில் 1200 வைன் போத்தல்கள் அல்லது கையிருப்பில் இருக்கும் வைன் போத்தல்களில் 10 வீதத்தினை ஏலம் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ள வைன்கள் 1930 – 1990ஆம் ஆண்டுகளுக்கிடையில் உற்பத்தி செய்யப்பட்டவையாகும்.
பாரம்பரியமிக்க இந்த வைன்களை ஏலம் விடுவதற்கு அந்நாட்டைச் சேர்ந்த சில வைன் நிபுணர்கள் தங்களது எதிர்ப்புக்கi வெளியிட்டுள்ளனர்.
அதிபர் பதவிக்கு மீண்டும் போட்டியிடப் போவதில்லை: சர்தாரி அறிவிப்பு-
முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் கணவரும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவருமான ஆசிப் அலி சர்தாரி 2008-ம் ஆண்டு பாகிஸ்தான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சிந்து மாகாணத்தில் மட்டும் ஆட்சி செலுத்தி வரும் இந்த கட்சி பாராளுமன்றத்தின் மேல்சபையில் அதிகாரம் செலுத்தி வருகிறது.
இந்நிலையில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தேசிய மற்றும் பிராந்திய பகுதிகளில் பாகிஸ்தான் மக்கள் கட்சி செல்வாக்கை இழந்தது.
இதனையடுத்து இனி இரண்டாவது முறையாக அதிபர் தேர்தலில் நிற்பதற்கான உரிமையை நான் இழந்துவிட்டேன் அதிபர் ஆசிப் அலி சர்தாரி கூறியுள்ளார்.
எனெனில் அடுத்து அதிபர் தேர்தலில் நான் நிற்கப்போவதில்லை என்று சர்தாரி கூறியுள்ளார். கட்சியை வலுப்படுத்தப்போவதாக அவர் கூறியுள்ளார்.
 

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger