கொழும்பு துறைமுக ஏற்பட்டது தீ விபத்தில் திட்டமிட்ட சதி?, -‘4 சீ சீ ரிவி’ கமராக்களில் பதிவு



கொழும்பு துறைமுக களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீ விபத்து ‘4 சீசி ரிவி’ கமராக்களில் மட்டுமே பதிவாகியுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு துறைமுக களஞ்சியசாலையில் ‘32 சீசி ரிவி’ கமராக்கள் இருக்கின்ற போதும் அவற்றில் நான்கில் மட்டுமே தீ விபத்து சம்பவம் பதிவாகியுள்ளது.
இவற்றில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தெரிவான முறையில் காட்சிகள் பதிவாக வில்லை என குற்றத்தடுப்புப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த 23 ஆம் திகதி இரவு கொழும்பு துறைமுக களஞ்சியசாலையில் தீ விபத்து ஏற்பட்டமை தொடர்பில் மின்சார தொழிநுட்பவியலாளர்கள் சாட்சி கூறியுள்ளனர்.
தீ பரவிய நேரம் நள்ளிரவு 12.36 என தெரிவிக்கப்பட்ட போதும் மின்சார தொழிநுட்பவியலாளர்கள் அதிகாலை 1.02 மணியளவிலேயே தீ பரவியதாக குறிப்பிட்டுள்ளனர்.
இத் தீ விபத்திற்கான காரணம் குழு ஒன்றோ அல்லது தனி ஒருவரது சதியாகவோ இருக்கக்கூடும் என பொலிஸார் நீதிமன்றிற்கு தெரிவித்துள்ளனர்.
இந்த தீ விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கொழும்பு மேலதிக நீதிவான் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger