பம்பலப்பிட்டியில் வர்த்தகர் கொலை: 3 பொலிஸார் கைது / “விளையாட்டு துப்பாக்கி” வினையாக மாறியது / விளக்கமறியல் சிறை தேடுதலில்; பெருமளவு கையடக்கத் தொலைபேசிகள் மீட்பு

 

பம்பலப்பிட்டியில் வர்த்தகர் கொலை: 3 பொலிஸார் கைது-
கொழும்பு 04, பம்பலப்பிட்டியில் வைத்து வர்த்தகர் ஒருவர் கொலைச்செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் மூவர் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப்புலனாய்வு பிரிவினராலேயே இவர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் இருவர் சிவிலியன்கள் என்றும் ஒருவர் சப்-இன்ஸ்பெக்டர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. சிவிலியன்கள் இருவரும் பெண்கள் என்றும் குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தொம்பே பகுதியில் வைத்து கடந்த 22 ஆம் திகதி கடத்தப்பட்ட வர்த்தகர் பம்பலப்பிட்டி பகுதியில் வைத்து கொலைச் செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரிலேயே இந்த ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் அறிவித்துள்ளனர்.
“விளையாட்டு துப்பாக்கி” வினையாக மாறியது-
பிளாஸ்டிக் துப்பாக்கியை களவெடுத்ததாக 10 வயது சிறுவன் ஏற்றுக் கொண்டதையடுத்து தண்டனையை தீர்மானிப்பதற்காக வழக்கு விசாரணையை எதிர்வரும் 18ஆம் திகதிக்கு அநுராதபுரம், நொச்சியாகம சுற்றுலா நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
இந்த வழக்கு விசாரணை நொச்சியாகம சுற்றுலா நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.
மற்றொருவரின் வீட்டை பலவந்தமாக உடைத்து உள்நுழைந்து கொள்ளையடித்தார் என்ற குற்றச்சாட்டின் பிரகாரம் குறித்த சிறுவனை ராஜாங்கனை பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அந்த வீட்டிலுள்ள பெண்ணொருவரே குறித்த சிறுவனுக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார்.
சிறுவன் சார்பில் நீதிமன்றதில் நேற்று ஆஜரான சட்டத்தரணி குறித்த சிறுவன் விளையாட்டு துப்பாக்கியை எடுப்பதற்காகவே குறித்த வீட்டுக்குள் சென்றதனை நீதிமன்றத்திலேயே ஒப்புக் கொண்டுள்ளார் என நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
இதனையடுத்தே தண்டனையை தீர்மானிப்பதற்காக வழக்கை எதிர்வரும் 18 ஆம் திகதிவரை ஒத்தி வைத்த நீதவான் அதுவரையிலும் சிறுவனை சிறுவர் இல்லத்தில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
முதல் தவனை விசாரணையின் போது, சிறுவன் நீதிமன்றத்திற்கு வருகை தந்திருக்கையில் சிறுவனின் சார்பில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி அந்த சிறுவனுக்கு 1000 ரூபா பெறுமதியான விளையாட்டு பொருட்களை வாங்கிக் கொடுத்துள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், இந்த சம்பவத்தை இணக்க சபைக்கு கொண்டுச் சென்றிருக்கலாம் எனினும் இராஜங்கனை பொலிஸார் சம்பவத்தை பெரிதுபடுத்தி கடும் குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குத் தாக்கல் செய்துள்ளது என்று சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
விளக்கமறியல் சிறை தேடுதலில்; பெருமளவு கையடக்கத் தொலைபேசிகள் மீட்பு-
கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலைக்குள் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது கையடக்கத் தொலைபேசிகள் உட்பட ஒருதொகை பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சிறைச்சாலைக்குள் நேற்றிரவு திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக அங்குள்ள உத்தியோகத்தர் ஒருவர் கூறியுள்ளார்.
சுமார் 60 சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சோதனை நடவடிக்கையின் போது 33 கையடக்கத் தொலைபேசிகள் 15 சிம் அட்டைகள் உட்பட 100 கிராம் ஹெரோய்ன் மற்றும் கஞ்சா போதைப்பொருள் என்பனவும் கைப்பற்றப்பட்டுளளன.
 
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger