துப்பாக்கிமுனையில் அச்சுறுத்தி தாய், மகள் பாலியல் துஷ்பிரயோகம் / மனைவிக்கு தீ வைத்த கணவனுக்கு மரணதண்டனை (இணைப்பு-2) / ஞாயிறு பத்திரிகைகளில் 90 வீதம் அரசுக்கெதிரான செயற்பாடு

ள்»

 

துப்பாக்கிமுனையில் அச்சுறுத்தி தாய், மகள் பாலியல் துஷ்பிரயோகம்-
எல்பிட்டிய, குருந்துகஹாதலா என்ற இடத்திலுள்ள வீடொன்றுக்குள் இரவு 8.00 மணியளவில் அத்துமீறிப் புகுந்த நால்வர் துப்பாக்கியை காண்பித்து அச்சுறுத்தி அந்த வீட்டிலுள்ள தாயையும் மகளையும் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட் படுத்தியுள்ளதாக எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்ட தாய் 65 வயதானவர் எனவும் மகள் 21 வயதானவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வீட்டில் கருவா உரித்துக் கொண்டிருந்த போது இரவு 8.00 மணியளவில் வீட்டுக்குள் ஆயுதங்களுடன் புகுந்த நால்வர் வீட்டிலுள்ளவர்களை அச்சுறுத்தி கட்டிப் போட்டு விட்டு தாயையும் மகளையும் பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளான தாயும் மகளும் எல்பிட்டிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். எல்பிட்டிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மனைவிக்கு தீ வைத்த கணவனுக்கு மரணதண்டனை (இணைப்பு-2)-
மட்டக்களப்பு, ஏறாவூர் தலவாய் கிராமத்தில் மனைவிக்கு தீ வைத்து கொலை செய்ததாக குற்றச்சாட்டப்பட்டுள்ள அவரது கணவனுக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
தலவாய்க் கிராமத்தைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான 49 வயதான நடராசா சித்திரவேல் என்பவருக்கே இவ்வாறு நேற்று புதன்கிழமை மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நிதிபதி கே.சிவபால சுந்தரம் முன்னிலையில் இந்த வழக்கு விசாரனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதிபதி மேற்கண்டவாறு தீர்ப்பளித்துள்ளார்.
ஏறாவூர் தலவாய்க் கிராமத்தைச் சேர்ந்த இவருடைய மனைவியான தங்கராசா வனிதாவுக்கும்; இவருக்கம் இடையில் 2007 ஆம் ஆண்டு யூலை மாதம் 15 ஆம் திகதி குடும்பப் பிரச்சினை ஒன்று ஏற்பட்டுள்ளது.
இவ்வேளையில் ஆத்திரம் அடைந்த குறித்த நபரின் மனைவி தான் தற்கொலை செய்யப் போவதாக கணவனை அச்சுறுத்தி தனக்குத்தானே மண்ணென்னை ஊற்றியுள்ளார்.
இதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட குறித்த அவரது கணவன் தீ மூட்டியுள்ளார் என்று அவர் மீது குற்றஞ் சாட்டப்பட்டிருந்தது.
மனைவி மீது தீ வைத்து கொலை செய்த சம்பவத்தில் குற்றவாளியாக இணங்காணப்பட்ட இவரை கைது செய்ததாக அவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்த ஏறாவூர் பொலிஸார் மட்டக்களப்பு நீதவான் நீமன்றத்தில் அவரக்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையிலேயே மேற்படி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்வரை குற்றவாளியாக இனங்கண்ட நீதிபதி குறித்த நபருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
ஞாயிறு பத்திரிகைகளில் 90 வீதம் அரசுக்கெதிரான செயற்பாடு-
இனவாதத்தையும் மதவாதத்தையும் ஏற்படுத்தி நாட்டில் பிரச்சினைகளை தோற்றுவிக்கும் வகையில் சில ஊடகங்கள் செயற்பட்டு வருகின்றன அதேவேளை,ஞாயிறு பத்திரிகைகளில் 90 வீதமானவை அரசாங்கத்துக்கு எதிரானதாகவே செயற்பட்டு வருவாக ஆளும் கட்சி எம்.பி.யான சஜின் வாஸ் குணவர்தன நேற்று சபையில் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை அமர்வின் போது பத்திரிகை பேரவைச் சட்டத்தின் கீழ் ஒழுங்கு விதி மீதான விவாதத்தில் கலந்த கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இலங்கையைப் பொறுத்தவரையில் இங்கு ஊடக சுதந்திரம் இல்லை என்பதே எதிர்க்கட்சிகளின் வாதமாக இருக்கின்றது. இது முற்றிலும் தவறாகும். அவ்வாறானதொரு நிலைமை இங்கு இருக்கவில்லை என்பதைக் கூறிக் கொள்கிறேன்.
ஊடக சுதந்திரம் முழுமையாக வழங்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் நாட்டில் வெளிவருகின்ற? ஊடகங்களில் பெரும்பாலானவை எதிர்க்கட்சி அரசியல்வாதிகளுக்கு சொந்தமானவை என்பதால் குறித்த ஊடக நிறுவனங்களின் தலைவர் அதிகாரங்களைப் பயன்படுத்தி? மேற்கொண்டு வருகின்றனரே தவிர, உண்மைகளை வெளிப்படுத்துவது கிடையாது.
தவறுகள் இடம்பெற்றால் அதனை உள்ளவாறு சுட்டிக்காட்ட வேண்டியது ஊடகங்களின் பொறுப்பாகும். இதனை குறித்த ஊடகவியலாளர்கள் செய்வதில்லை. மாறாக இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டி விட்டு நாட்டில் பிரச்சினைகளை ஏற்படுத்துவதற்கும் அதனூடாக அரசாங்கத்தை கவிழ்ப்பதற்குமே செயற்பட்டு வருகின்றனர்.
இவ்வாறான விடயங்களையே தடைப்படுத்த வேண்டும் என்று கேட்கிறோம். அதற்காகவே பத்திரிகை பேரவைச்சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்று கூறகிறேன்.
இன்றைய காலத்தில் ஞாயிறு தினப் பத்திரிகைகளை எடுத்துக் கொண்டால் அவற்றில் 90 வீதமானவை அரசாங்கத்துக்கு எதிரானவையாகவே செயற்பட்டு வருகின்றன.
அது மாத்திரமின்றி சில ஊடகங்கள் வெளிநாடுகளுக்கும் வெளிநாட்டுத் தூதுவர்களுக்கும் ஏற்ற வகையில் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
ஊடகங்களையோ அல்லது ஊடகவியலாளர்களையோ அடக்குவதற்கான, அச்சுறுத்துவதற்கான தேவை எமக்குக் கிடையாது.
அந்த வகையில் ஊடகங்கள் தமது பொறுப்பினை உணர்ந்து செயற்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger