எகிப்து அதிபர் முகமது முர்சிக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். அவரது சகோதரத்துவ கட்சி ஆதரவாகவும் எதிர்க்கட்சியான சுதந்திரம் மற்றும் நிதிக் கட்சியினர் எதிர்ப்பாகவும் உள்ளன. இவர்களின் மோதலால் பலர் உயிரிழந்து வருகின்றனர்.
கெய்ரோ அலெக்சாண்ட்ரியா மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறும் கலவரத்தில் சுமார் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையே அதிபர் முர்சி பதவி விலக கோரி இன்று எதிர்க்கட்சிகளின் மாபெரும் பேரணி தலைநகர் கெய்ரோவில் நடக்கிறது. அதில் பங்கேற்க லட்சக்கணக்கான மக்கள் அங்கு குவிந்த வண்ணம் உள்ளனர்.
இதனால் போராட்டம் நடைபெறும் தக்ரிக் மைதானம் மற்றும் அதிபர் மாளிகை பகுதியில் பலத்த ராணுவ பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், அதிபர் பதவி விலக வலியுறுத்தி இளைஞர்கள் நாடு முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்துகின்றனர். இதுவரை 2 கோடியே 25 லட்சம் பேர் கையெழுத்திட்டுள்ளனர்.
அதை ஆதாரமாக வைத்து அதிபர் முர்சி பதவி விலக வேண்டும் என இன்று போராட்டம் நடத்தப்படுகிறது. அப்போது பதவி விலகல் ஆதரவு மனுக்களுடன் தெருக்களில் இளைஞர்கள் பேரணி நடக்கிறது.
Post a Comment