ஆணி மீது தலைகீழாக நின்ற நபர் (PHOTOS)
சீனாவைச் சேர்ந்த நபரொருவர் கூரிய ஆணியின் மீது தலைகீழாக நின்று அனைவரையும் ஆச்சரிப்படுத்துகின்றார். லி ஷின் என்ற 47 வயதான சீனாவைச் சேர்ந்தவரே சவாலான வேலையை சாதரணமாக செய்து ஆச்சரியமூட்டுகிறார்.
சீனாவைச் சேர்ந்த நபரொருவர் கூரிய ஆணியின் மீது தலைகீழாக நின்று அனைவரையும் ஆச்சரிப்படுத்துகின்றார். லி ஷின் என்ற 47 வயதான சீனாவைச் சேர்ந்தவரே சவாலான வேலையை சாதரணமாக செய்து ஆச்சரியமூட்டுகிறார்.
கூரிய ஆணி ஒன்றை தரையில் நிறுத்தி வைத்தி அதில் அவரது தலையால் நிற்கிறார். இதன்போது அவரது நிறை அனைத்தையும் ஆணியின் மீது தலையினால் வேறு பிடிமானங்கள் இன்றி தாங்கப்படுகிறது.
66 கிலோ கிராம் உடல் நிறையைக் கொண்ட லி ஷின் சுமார் 10 செக்கன்கள் வரையில் ஆணியின் மீது தலையால் நிற்கிறார். இதன் போது இவரது தலையில் சிறியளவிலான துறை மட்டுமே ஏற்படுகிறது.
இது தவிர லி ஆணியில் வயிற்றில் மூலமும் நின்று அசத்துகிறார். அச்சத்தை ஏற்படுத்தும் இவ்வேலையை 20 வருடங்களாக லி பயிற்சி செய்து வருகிறாராம்.
சீனாவில் நன்னிங்கில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் தனது திறமை வெளிப்படுத்திய போதே இங்குள்ள புகைப்படங்கள் பிடிக்கப்பட்டுள்ளது.
வேலை, தலைவலி என்போருக்கு மத்தியில் தலைவலியையே வேலையாக்கிக் கொண்டுள்ளார் இந்த மனிதர்.
இஸ்ரேலின் தாக்குதலில் 42 சிரிய படைவீரர்கள் பலி-
சிரியா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 45 சிரியப் படைவீரர்கள் பலியானதுடன் 150 மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சிரியா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 45 சிரியப் படைவீரர்கள் பலியானதுடன் 150 மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சிரியாவின் ஜனாதிபதி பஷர் அல் அஸாட்டினை பதவி விலகக் கோரி கடந்த இரண்டு ஆண்டுகளாக சிரியாவில் போராட்டங்க இடம்பெற்று வருகின்றது. இதனால் இதுவரையில் அங்கு 80 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளதுடன் 5 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் அகதிகளாகியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று இஸ்ரேல், சிரியா மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இது குறித்து இஸ்ரேல் கூறுகையில், லெபனான் நாட்டில் செயல்படும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளுக்கு விநியோகிக்க ஏவுகணைகள் அடங்கிய ஆயுதங்கள் சேமிக்கப்பட்டிருந்த கிடங்குகளை அழிப்பதற்காகவே தாக்குதல் நடத்தியதாகவும் விளக்கம் அளித்துள்ளது.
இத்தாக்குதலுக்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment