மனைவி மீது அசிட் வீசிய கணவன் அசிட் அருந்தி தற்கொலை / போதையில் மாணவர்களை ஏற்றிச் சென்ற சாரதி கைது / அமைச்சர் டிலான் பெரேராவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி


 

sucide-001மனைவி மீது அசிட் வீசிய கணவன் அசிட் அருந்தி தற்கொலை-
குடும்ப பிரச்சினை காரணமாக தனது மனைவி மீது அசிட் வீசி பின் அசிட் அருந்தி கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ருவன்வெல்ல – தெஹியோவிட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.
அசிட் வீச்சுக்கு உள்ளான பெண் சிகிச்சைக்கென ருவான்வெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அசிட் அருந்திய 46 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். ருவான்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அமைச்சர் டிலான் பெரேராவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி-
வெளிநாட்டு வேலைவாய்ப்பு விரிவாக்கல் மற்றும் நலன்புரி அமைச்சர் டிலான் பெரேராவுக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சி நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை முன்வைத்துள்ளது. வெளிநாட்டு தொழில்வாய்ப்பினை பெற்றுச் செல்பவர்கள் அங்கு எதிர்நோக்கும் இன்னல்கள் குறித்து அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என எதிர்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய தேசிய கட்சியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேராவினால் இந்த நம்பிக்கை இல்லா பிரேரணை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ரிஷானா நபீக்கிற்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனைக்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாது சவுதி அரேபிய அரசாங்கத்தின் மீது அமைச்சர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் அமைச்சர் டிலான் பெரேராவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையானது 104 மேலதிக வாக்குகளால் தோல்வியடையச் செய்யப்பட்டுள்ளது. இதன்போது ஐ.தே.கட்சியின் பிரேரணைக்கு எதிராக 136 வாக்குகளும் பிரேரணைக்கு ஆதரவாக 32 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
போதையில் மாணவர்களை ஏற்றிச் சென்ற சாரதி கைது-
மதுபோதையில் மாணவ, மாணவிகளை பாடசாலைக்கு ஏற்றிச்சென்ற சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர். கம்பஹாவின் நிட்டம்புவையிலுள்ள பாடசாலை ஒன்றுக்கு மாணவர்களை ஏற்றிச்சென்ற சாரதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சாரதி மதுபோதையில் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து கொழும்பு- கண்டி வீதியில் வறக்காபொலையில் குறித்த பாடசாலை வாகனத்தை நிறுத்தி சாரதியை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சாரதி பொலிஸ் வைத்து பலூனை ஊதுவதற்கு கொடுத்ததாகவும் அதன்போது அவர் போதையில் இருந்தமை கண்டறியப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger