தேவையான பொருட்கள்:
அவல் - 2
கப்
வெங்காயம் - 1
தக்காளி - 1
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1/2 டேபிள்
ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - 1/2
டீஸ்பூன்
சீரகம் - 1/2
டீஸ்பூன்
வரமிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிது
வேர்க்கடலை - 1/2 டேபிள்
ஸ்பூன்
பச்சை மிளகாய் - 5
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
செய்முறை:
* வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
* முதலில் அவலை நன்கு கழுவி, நீரை முற்றிலும் வடிகட்டி தனியாக ஒரு பொளலில்
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை
அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், கடுகு, சீரகம், வரமிளகாய், கறிவேப்பிலை, வேர்க்கடலை, பச்சை மிளகாய் மற்றும் பெருங்காயத்தூள்
சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு நறுக்கிய வைத்துள்ள
வெங்காயத்தை சேர்த்து, பொன்னிறமாக வதக்கி, மஞ்சள் தூள் சேர்த்து 3-4 நிமிடம் தீயை குறைவில் வைத்து, மூடி வைக்க வேண்டும்.
* பின்பு நறுக்கிய தக்காளியை
சேர்த்து சிறிது நேரம் வதக்கி,
அவலை
சேர்த்து நன்கு கிளறிவிட வேண்டும்.
* இறுதியில் உப்பு மற்றும்
எலுமிச்சை சாறு சேர்த்து, 3-5 நிமிடம் பிரட்டி
கொத்தமல்லியைத் தூவி விட்டு,
இறக்க
வேண்டும்.
* இப்போது சுவையான அவல்
உப்புமா ரெடி!!!
Post a Comment