புலி சந்தேகநபரின் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் ஏற்பு / தென்னாசியாவிலே, பிறப்பிற்கு சிறந்த இடம் இலங்கை


 

புலி சந்தேகநபரின் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் ஏற்பு-
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதான சந்தேகநபரின் குற்ற ஒப்புதல் வாக்குமூலமொன்று வவுனியா மேல் நீதிமன்றத்தால் ஏற்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் இடம்பெற்ற வழக்கு விசாரணைகளின் போது அவ்வாக்கு மூலம் எதிரியினால் சுய விருப்பின் பேரில் வழங்கப்பட்டது என்ற காரணத்தால் ஏற்கப்பட்டுள்ளது.
ராஜேந்திரம் கருணாகரன் அல்லது பிரதீபன் அல்லது ஆழியான் என்ற விடுதலைப்புலி சந்தேகநபர் ஒருவருக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த வழக்கின் உண்மை விளம்பல் விசாரணையின் கட்டளை இம் மாதம் 3 ஆம் திகதி நீதிபதி டி.என். சமரக்கோன் முன்னிலையில் வழங்கப்பட்டது.
இதனை ஆராய்ந்த நீதிபதி தனது தீர்ப்பில் எதிரி தரப்பு சட்டத்தரணி குறித்த எதிரியினால் இந்த குற்ற ஒப்புதல் வாக்குமூலம் தன்னிச்சையாக வழங்கப்படவில்லை என்பது தொடர்பில் நீதிமன்றத்தை திருப்தி படுத்தவில்லை என்ற காரணத்தால் குற்ற ஒப்புதல் வாக்கு மூலத்தை எதிரிக்கு எதிரான சான்றாக பயன்படுத்த வழக்கு தொடுனர் தரப்புக்கு அனுமதி வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.
அரச வழக்கு தொடுனர் சார்பில் அரச சட்டவாதி நாகரட்ணம் நிசாந் ஆஜராகி வாதாடியிருந்தார்.
தென்னாசியாவிலே, பிறப்பிற்கு சிறந்த இடம் இலங்கை-
தென்னாசியாவிலே, பிறப்பதற்கு சிறந்தவொரு இடம் இலங்கையே என சேவ் த சில்வரன் அமைப்பு தெரிவித்துள்ளது| அந்த அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள உலகில் வாழும் தாய்மாரின் நிலைமை என்ற அறிக்கை ஒன்றிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
176 உலக நாடுகளை பிரநிதித்துவப்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கைக்கு அமைய, தாயவதற்கு ஏற்புடைய நாடு என்ற பட்டிலில் இலங்கை 89 வது இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தாயவதற்கு ஏற்புடைய நாடு என்ற பட்டியலில் பின்லாந்து முதலாவது இடத்திலும் கொங்கோ அரசாங்கம் இறுதி இடத்திலும் உள்ளதாக சேவ் த சில்வரன் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
 

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger