புலிகளின் 100 கிலோ தங்கம் கள்ள சந்தையில்! / கைது செய்யப்பட்டவர் இலங்கைக்கு நாடு கடத்தல்


 

புலிகளின் 100 கிலோ தங்கம் கள்ள சந்தையில்!-
தமிழீழ  விடுதலைப்  புலிகள்  இயக்கத்தால்  பதுக்கி  வைக்கப்பட்டு  இருந்த தங்கத்தின் ஒரு பகுதியுடன் 11 பேர் பேலியகொட பொலிஸாரால் கடந்த நாட்களில் பிடிக்கப்பட்டு உள்ளனர்.
இலங்கை கிறிக்கெற்  அணியின் உப தலைவராக இருந்த ரோய் டயஸின் மனைவி சண்டமாலி தரங்க டயஸ், ஓய்வு பெற்ற உதவி பொலிஸ் அத்தியட்சகர் சிறி லால் ஆனந்தராஜ் ரணசிங்க ஆகியோர் இவர்களில் மிக முக்கியமானவர்கள். கடல் படை உத்தியோகத்தர்கள் இருவரும் இவர்களில் அடக்கம்.
தங்கத்தின் எடை 100 கிலோ. 5000 இலட்சத்துக்கு விற்க முயன்று இருக்கின்றனர். அரசிடம் பணம் இல்லை, எவரும் வாங்கலாம் என்று சொல்லியே விற்க பார்த்தனர்.
இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இவர்களை கையும், களவுமாக பிடிக்க அதிரடி மேற்கொண்டனர்.
தங்கம் விற்பனைக்கு என விளம்பரப்படுத்தப்பட்டபோது பொலிஸ் குழு ஒன்று வர்த்தகர்கள் போல் மாறுவேடம் பூண்டது. கிறிக்கெற் வீரரின் மனைவியுடன் வியாபாரம் பேசியது.
வியாபாரத்தை பேசி, முடிக்க ரொக்கப் பணத்துடன் வீட்டுக்கு கட்டாயம் வந்தாக வேண்டும் என்று இவர்களுக்கு சொல்லி இருக்கின்றார் அம்மணி.
ஆனால் வீட்டுக்கு எல்லாம் வர முடியாது, ஹோட்டலுக்கு வரலாம் என்று புத்தி சாதுரியமாக பொலிஸார் பேசி இருக்கின்றனர்.
இவர்களை சந்திக்க ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றுக்கு இப்பெண் வந்து இருக்கின்றார். ஒரு இலட்சம் ரூபாய் போலி கட்டுடன் இவர்களும் வந்திருந்தனர். இவர்கள் பணத்தை கொடுத்தனர்.
தங்கம் கையளிக்கப்படுகின்ற பதிலுக்கு காசோலை கொடுத்தார் கிறிக்கெற் வீரரின் மனைவி. இவ்வளவும் இடம்பெற்றபோது கும்பலைச் சேர்ந்த இன்னும் மூவரும் கூடவே காணப்பட்டனர்.
உடனடியாக பொலிஸார் கிறிக்கெற் வீரரின் மனைவியை கைது செய்தனர். தொடர்ந்து இக்கும்பலோடு தொடர்புடைய பலரும் பிடிக்கப்பட்டனர். இன்னும் பலர் பிடிக்கப்பட இருக்கின்றனர். குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரிதான்.
பிடிக்கப்பட்டவர்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் போடப்பட்டு, பின்னர் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.
கிறிக்கெற் வீரர் டயஸ் தற்போது மலேசியாவில் பயிற்றுவிப்பாளராக கடமை ஆற்றி வருகின்றார்.
கைது செய்யப்பட்டவர் இலங்கைக்கு நாடு கடத்தல்-
பாகிஸ்தானால் தேடப்பட்டு வந்த தீவிரவாத சந்தேகத்துக்குரியவரை இந்தியா இலங்கைக்கு நாடு கடத்தியுள்ளது. இவர் கடந்த 7 வருடங்களுக்கு முன்னர் பாகிஸ்தானில் இருந்து வெளியேறி இலங்கை வந்தபின் இந்தியா சென்றுள்ளார்.
இதனையடுத்து அவர் ஆந்திர பிரதேசத்தில் உரிய விசா அனுமதியின்றி வசித்து வந்த நிலையிலேயே கடந்த 6 ஆம் திகதி இந்திய பொலீசாரினால் கைது செய்யப்பட்டார்.
34 வயதான நிசார் அஹ்மட் என்ற இவர் இலங்கைக்கு அனுப்பப்பட்ட நிலையில் இலங்கை அதிகாரிகளால் பாகிஸ்தான் அதிகாரிகளிடம் கையளிக்கப்படவுள்ளதாக பிடிஐ செய்தி சேவை தெரிவித்துள்ளது.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger