எதிர்க்கட்சி கேட்டுக்கொண்ட போதும் பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்துச் செய்ய முடியாது என அரசாங்கம் நேற்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தது. எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் கேள்விக்கு பதலளித்த பிரதமர் தி.மு.ஜயரட்ன, உலகின் பல பாகங்களிலும் புலி இயக்கத்தை மீளக்கட்ட முயற்சிகள் நடப்பதாக தெரிவித்தார். யுத்தம் முடிந்த பின் புனர்வாழ்வுக்காக சரணடையாத விடுதலை புலி சந்தேக நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க பயங்கரவாத தடைச் சட்டம் தேவை எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஒரு தமிழ் அரசியல் கட்சி ஆதரவாளரை கொல்ல 2012 மார்ச் 17ஆம் திகதி இரண்டு புலி உறுப்பினர்கள் திட்டம் தீட்டியமை, தென்னிந்தியாவில் இவ்வாறான நால்வர் டிசெம்பர் 20ஆம் திகதி கைது செய்யப்பட்டமை ஆகியன இந்த இயக்கத்தை புதுப்பிக்க எடுக்கும் முயற்சிகளை காட்டுகின்றன என பிரதமர் தெரிவித்தார்.
பயங்கரவாத இயக்கம் ஒன்றுடன் தொடர்பு இருப்பதாக குற்றஞ்சாட்டி அசாத் சாலியை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்ததாக எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.
அசாத் சாலி இந்தியாவில் அளித்த ஒரு போட்டியின்போது, முஸ்லிம்களுக்கு ஏதிரான வன்முறையை ஆயுதங்களினால் எதிர்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். இதன் மூலம் சமூகங்களுக்கு இடையில் பதற்றத்தை தோற்றுவித்தார் என்பது அவருக்கு எதிரான குற்றச்சாட்டாகும் என பிரதமர் மேலும் தெரிவித்தார்
Post a Comment