அஸாத் சாலி விடுதலை - அரசு ஒரு கல்லில் பல மாங்காய்க்கள் பறிப்பு! (வீடியோ இணைப்பு)


அசாத் சாலி விடுதலை (VIDEO) / ஆயுதப் போராட்டத்தினை ஆரம்பிப்பதாக கூறியதாலே அசாத்சாலி கைது -பாதுகாப்பு செயலர்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்ட கொழும்பு மாநகர சபை முன்னாள் பிரதி மேயர் அஸாத் சாலி விடுதலை செய்யப்பட்டுள்ளார். எனினும் உடல் நிலை பாதிப்பு காரணமாக கொழும்பு நவலோக்க வைத்தியசாலையின் ஏழாம் மாடியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆயுதப் போராட்டத்தினை ஆரம்பிப்பதாக கூறியதாலே அசாத்சாலி கைது -பாதுகாப்பு செயலர்-
தமிழகத்தில் உள்ள தமிழ் அமைப்பு ஒன்றுடன் இணைந்து இலங்கையில் உள்ள முஸ்லிம் மக்களை ஆயுதப் போராட்டத்திற்கு கொண்டு செல்ல போவதாக அசாத் சாலி தெரிவித்தமையினாலேயே அவர் கைதுசெய்யப்பட்டார் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சாலி கைது செய்யப்பட்டமை குறித்து அமைச்சர் ஹக்கீம் தெரிவித்திருந்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
புலிகளின் போர் காரணமாக 30 வருடம் துயரங்களை அனுபவித்த இலங்கை மக்களுக்கு மீண்டும் அவ்வாறாதொரு நிலைமை ஏற்படாது தடுக்க வேண்டியது எனது கடமை. அப்படியான ஒன்று ஏற்பட போகும் என்பதை அறிந்து பாதுகாப்புச் செயலாளர் தூங்கி கொண்டிருந்தாரா என்பதை சிலர் தன்னிடம் கேட்பதற்கு முன்னர், அதற்கு இடமளிக்காது நாட்டை நேசிக்கும் பாதுகாப்புச் செயலாளர் என்ற வகையில், நாட்டுக்கு பொறுப்பு கூறும் கடமை உண்டு.
நாட்டின் பாதுகாப்புக்காகவும் நாட்டின் பொறுப்புக்காகவும் தான் தொடர்ந்தும் தயார் நிலையில் இருந்து வருகின்றேன். அசாத் சாலி எதற்காக கைது செய்யப்பட்டார் என்பதை அறியாது சிலர் பேசி வருகின்றனர். முஸ்லிம் அடிப்படைவாதம் குறித்து பேசியதால் அவர் கைது செய்யப்பட்டதாக முஸ்லிம் மக்கள் நினைத்தனர்.
அசாத் சாலி வெறுமனே தமிழகத்திற்கு செல்லவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருடனும், திறந்த பல்கலைக்கழகத்தில் இருக்கும் தமிழ் பேராசிரியர் ஒருவருடனும் அவர் தமிழகத்திற்கு சென்று, தமிழ் அமைப்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
முஸ்லிம் மக்களை அமைப்பொன்றில் இணைந்து ஆயுதப் போராட்டம் ஒன்றில் ஈடுபடுத்துவது குறித்து பேசியுள்ளார். பிரித்தானிய தமிழர் பேரவை வெளிநாடுகளில் உள்ள முஸ்லிம் மக்களை இணைத்து கொண்டு இங்கிலாந்தில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியிருந்தது.
தமிழகத்தில் நடக்கும் இந்த பேச்சுவார்த்தைகளை இலங்கையில் போராட்டமாக மாற்ற இடமளிக்க போவதில்லை எனவும் கோத்தபாய ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

அஸாத் சாலியின் கைது அரச கண் துடைப்பே!
அஸாத் சாலி கைது செய்யப்பட்டவுடன் 3 மாதங்கள் சிறையில் அடைக்கப்படுவார் என்றெல்லாம் கதையளக்கப்பட்டது வாசகர் அறிந்ததே! ஆனால் இவையாவும் அரசும் அஸாத் சாலியும் இணைந்து நடாத்திய நாடகமே என்பது தற்போது வெட்ட வெளிச்சமாகிவிட்டது. 

ஒரு கல்லில் பல மாங்காக்கள் - இதுவே அரசின் இலக்கு!
அஸாத் ஸாலியின் திடீர் கைது, அதைத் தொடர்ந்து அஸாதின் உண்ணாவிரதப் போராட்டம், மகளின் வாடிய முகத்துடனான பேட்டி, விகாரைக்கு மலர் தட்டுடன் பிரவேசம், மக்களின் ஹா்த்தால், அடிப்படைவாதத்தை தூண்டும் இன்னும் சிலர் உள்ளனர்.அவா்கள் மீதும் கவணம் செலுத்தப்படும் என்ற பாதுகாப்புச் செயலாளரின் அறிவிப்பு... இத்தனையும் சில நாட்களுக்குள் எம் விழிகள் முன் அரங்கேறிய திட்டமிட்ட நாடகம்...
இவற்றின் மூலம் அரசு எதிர்பார்க்கும் அடைவுகள்...
  1. இலங்கையில் அடிப்படைவாதம், ஆயுத போராட்டம் என்பனவற்றை தூண்டும் ஒரு சாரார் முஸ்லிம்களுக்கு மத்தியில் உள்ளனர். இவர்களை அடக்க வேண்டும் என்ற போர்வையை போர்த்திக் கொண்டு அரசு களத்தில் இறங்கியுள்ளது. அஸாத் சாலி எனபவரை துரும்புச் சீட்டாய் பயன்படுத்தி இலங்கையில் அடிப்படைவாதிகள் உள்ளனர் என்ற எண்ணக்கருவை பொது மக்கள் மற்றும் சர்வதேச மட்டத்தில் அரசு வெளிக்காட்டி விட்டது.  எனவே இலக்கு முடிந்தவுடன் அஸாத் சாலி விடுதலை செய்யப்பட்டுவிட்டார். இதன் பிறகு தான் அரசின் கழுகுப்பிடி இறுகப் போகிறது.குறிப்பாக இஸ்லாமிய இயக்கங்கள் நோக்கி அரசின் அவதானம் குவிமையப்படுத்துவதற்கு கூடிய வாய்ப்புகள் உண்டு. அதிலும் குறிப்பாக, யாரெல்லாம் அரசின் அநீதிகளுக்கு எதிராகவும், பொதுபல சேனா உள்ளிட்ட இனவாதிகளுக்கு எதிராகவும் குரல்கொடுக்க முனைகிறார்களோ அவர்கள் அல்லது அவ்வமைப்புகள் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்படும். இதற்காக தான் ஏலவே இந்த ஆண்டின் ஆரம்பத்தில் பயங்கரவாதத்திற்கு நிதி உதவி செய்வதை தடுத்தல் என்ற ஒரு சட்ட மூலத்தை அரசு நாடாளுமன்றத்தில் வெற்றி பெறச்செய்தது. எனவே, கிட்டிய காலத்துக்குள் இவற்றை அரசு அமுல் படுத்தும்.
  2. வீறியத்துடன் களத்தில் செயற்படும் இஸ்லாமிய அமைப்புகளுக்கு எச்சரிக்கை சமிக்ஞை விடுவதன் மூலம் இஸ்லாமிய தஃவாப் பணியை முடக்குவது அஸாத் சாலியின் கைதுக்குப் பின் மறைந்திருக்கும் மற்றுமொரு இலக்கு.மீண்டுமொரு பிரபாகரனை உருவாக்க விடமாட்டோம் என்ற கோதாபயின் அறிவிப்பில் மறைந்துள்ள உள்ளர்த்தம் “இதன் பிறகு யாராவது இஸ்லாம், உரிமை என்று பேசினால் அவர்களை அழிப்போம்” என்பது தான். எனவே இயல்பாக எந்த அமைப்புகள் எல்லாம் பெயரளவில் இஸ்லாமிய முழாம் புசிக்கொண்டு தஃவா செய்தனவோ அவையெல்லாம் இதன் பிறகு மௌனம் சாதிக்கும் என்பதை எதிர்பார்க்கலாம்.
  3. முஸ்லிம்கள் சுமுகமாய் வாழ்வதாயின் அதற்குரிய ஒரே வழி பெரும்பான்மை இனத்துடனும் அவர்களின் கலாசாரங்களுடனும் இணைந்து போவது தான் என்ற மனப்பதிவை முஸ்லிம்களிடம் விதைப்பது இதன் பின்னால் உள்ள அடுத்த இலக்கு.முஸ்லிம்களுக்காய் குரல் கொடுத்த அஸாத் சாலியின் குடும்பமே விஹாரைக்கு வந்து வழிபட்டுவிட்டு சென்றுவிட்டார்கள். இதன் பிறகு நாம் எம்மாத்திரம்! என்ற எண்ணம் இன்று படிப்படியாக துளிர்விட ஆரம்பித்துவிட்டது. பறிக்கப்படும் எமது உரிமைகளுக்காய் குரல் கொடுக்கும் உணர்வுள்ள ஒரு சமுதாயத்திற்கு மாற்றமாக மத நல்லிணக்கம் என்ற போர்வையில் பிற மத நம்பிக்கைகளுடன் கலந்து காணாமல் போகும் ஒரு அவலம் இன்று நம் சமூகத்துக்கு ஏற்பட்டுள்ளது. அனைவர் வாயிலும் “மத நல்லிணக்கம்! சமூக சகவாழ்வு! இன புரிந்துணர்வு! தேசிய முன்னேற்றம்! சமூக ஒருமைப்பாடு! முரண்பாட்டில் உடன்பாடு! என்பன போன்ற பசப்பு வார்த்தைகள் வெளியாகத் துவங்கிவிட்டன. “எமது நாடு! எமது உரிமை! எமது கலாசாரம்! என்ற தனித்துவக் குரல்கள் கதிரவன் கண்ட பனித்துளியாய்கரைந்து காணாமல் போய் விடும் அபாய்ம ஏற்பட்டுள்ளது. இதுவே அரசின் எதிர் பார்ப்பும்.
  4. ஏலவே நாம் குறிப்பிட்டது போன்று கொள்கையற்ற கோமாளியான அஸாத் சாலிக்கு அரசியல் லாபத்தை பெற்றுக் கொடுத்து முஸ்லிம்களின் மாவீரனாக சித்தரிக்க முனைவதும் இதன் திட்டங்களில் ஒன்று.இன்று எமக்கு ஏற்பட்டுள்ளது வெறுமனே இருப்புடன் கூடிய சவால் மட்டுமல்ல! எமது கொள்கை, மார்க்கம், நம்பிக்கை, கலாசாரம் உள்ளிட்ட விடயங்களை தக்கவைப்பதற்கான சவால்! எமது ஈமானையும் வாழ்வியலையும் பேணிக்கொள்வது குறித்த சவால்! இச்சவால்களை யாரால் வென்றெடுக்க முடியும்? உள்ளத்தில் சரியான நம்பிக்கையும், ஈமானிய உறுதியும், கொள்கைத் தெளிவும், வஹியை மட்டும் பின்பற்ற வேண்டும் என்ற உணர்வும், சமூக பற்றும் யாரிடம் ஒருங்கே அமையப்பெருகிறதோ அவர்களால் மட்டும் தான் இவற்றை சாதிக்க முடியும். அல்லாஹ்வையும் நம்பிக்கொண்டு அவ்லியாவையும் விசுவாசித்து ஈமானை அற்ப லாபங்களுக்காய் அடகு வைக்கும் அஸாத் சாலி வகையராக்களால் இது எப்படி சாத்தியம்? “அல்லாஹ் குறித்த நம்பிக்கை மூட நம்பிக்கை” என்று ஞான சார சொன்ன போது இதற்கு எதிராய் யாரால் குரல் கொடுக்க முடியும்? மூட நம்பி்க்கை ஏதும் அற்ற ஒரு முஸ்லிமால் தான் இது சாத்தியம்.பேச முடியாத, கேட்க முடியாத, மரணித்து போன கல்லறைகளிடம் சென்று தேவைகளை சமர்ப்பிக்கும் அஸாத் சாலி போன்ற முட்டால்களால் ஞான சாரவின் வாதத்திற்கு எப்படி பதிலளிக்க முடியும்? ஹிஜாப் தீவிர வாத ஆடை! அது தடைசெய்யப்படல் வேண்டும்! என்ற குற்றச்சாட்டுக்கு யாரால் மறுப்பு சொல்ல முடியும்? ஹிஜாபையே தனது வாழ்வாக ஏற்று வாழும், ஹிஜாப் என்பதன் தாத்பரியம் புரிந்த உண்மை முஸ்லிமால் தான் இது சாத்தியம். சம்பிரதாய வழமைக்கு ஏற்ப தலையின் ஒரு பகுதியை மறைத்து முடியை வெளிக்காட்டி, கழுத்தையும் காதுகளையும் விருந்தாக்கி, ஹிஜாப் என்ற வாழ்க்கைநெறிக்கே வேட்டு வைத்து வாழும் ஒருவரால் இஸ்லாம் இயம்பும் ஹிஜாப் எப்படி பாதுகாக்கப்படும்?
எனவே, அஸாத் சாலி போன் கொள்கையற்ற ஒருவரின் கையில் இந்த நாட்டு முஸ்லிம்களி் தலைமைத்துவம் செல்லுமாயின் இஸ்லாம் இயல்பாக இந்நாட்டைவிட்டு விடைபெற்றுச் சென்றுவிடும்.விட்டுக் கொடுப்புகள், ஐக்கியம் என்ற போர்வையில் குர்ஆனிய கோட்பாடுகள் ஏலம் விடப்படும்! 

இத்தனையும் நடைபெறவேண்டுமானால் அஸாத் சாலி ஹீரோவாக்கப்பட வேண்டும். இப்போது இவ்விலக்கு கச்சிதமாய் நிறைவேற்றப்பட்டுவிட்டது. ஏனெனில் எம் சமூகம் தான் என்றுமே எதனையும் சிந்தித்துணர்வது கிடையாதே!



Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger