வடமாகாண தேர்தல் நடத்தப்பட வேண்டும்; தயா மாஸ்ரருக்கு, சரத் பொன்சேகா கடும் எதிர்ப்பு / இன்புலுவன்சா குறித்து அவதான எச்சரிக்கை / சமாதனத்தை இழக்கும் நிலை ஏற்படக் கூடாது -தயான் ஜயதிலக்க


 

தயா மாஸ்ரருக்கு; சரத் பொன்சேகா கடும் எதிர்ப்பு-
புலிகளின் முன்னாள் ஊடகத்துறை இணைப்பாளர் தயா மாஸ்ரரை வடக்குத் தேர்தலில் அரசு முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துவதை தான் கடுமையாக எதிர்ப்பதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
புலிகள் மக்களின் பணத்தைக் கொள்ளையடித்தனர். அவர்கள் மாகாண சபைக்கு வந்தாலும் அதையே செய்வார்கள் எனக் குறிப்பிட்ட பொன்சேகா, முன்னாள் புலிகள் வன்முறையைக் கைவிட்டதை ஆதரிக்கின்றேன். ஆயினும் அவர்கள் மாகாண சபை தலைமைப் பதவிகளுக்கு வருவதை மக்கள் விரும்ப வில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
வடமாகாண தேர்தல் நடத்தப்பட வேண்டுமென கோரிக்கை-
வெகுவிரைவில் வட மாகண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும் என ஜனநாயக கட்சி கோரியுள்ளது. அந்த கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா கொழும்பில் நேற்றிடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
ஏனைய மாகாண சபை தேர்தல்கள் நடத்தப்பட்ட வண்ணம் வட மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
எவ்வாறாயினும், 13வது அரசியலமைப்பு சீர்த்திருத்தத்தில் உள்ள பிரிவினைவாத சரத்தை சீர்திருத்தாது வட மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டாம் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்வது உள்ளிட்ட பல தரப்பட்ட விடயங்கள் தொடர்பாக இன்றைய தினம் கலந்துரையாடப்படவுள்ளன. இது தொடர்பான சந்திப்பு ஒன்று இன்று மாலை கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனுடன் இடம்பெறவுள்ளதாக டெலோ இயக்கத்தின் பிரசார செயலாளர் எம் கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
இன்புலுவன்சா குறித்து அவதான எச்சரிக்கை-
இன்புலுவென்சா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் சகல மருத்துவமனைகளுக்கும் தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளதாக தொற்றுநோய் தடுப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது. ஏப்ரல் மாதம் தொடக்கம் மே மாதம் வரையில் இன்புலுவென்சா தொற்றுக்குள்ளானவர்கள் 232 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறு தொற்றுக்கு உள்ளானவர்களில் 134 பேர் கர்பிணி தாய்மார்கள் என தெரிவிக்கப்படுகிறது. இன்புலுவென்சா வைரஸ் தொற்றானது, கர்பிணி பெண்கள், 7 வயதிலும் குறைந்தை குழந்தைகள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டவர்ளையே அதிகம் தாக்கும் என்றும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், தடுமன், காய்ச்சல் என்பன நாட்பட்டு காணப்பட்டால் உடனடியாக அரச மருத்துவமனையில் சிகிச்கை பெறுமாறு சுகாதார அமைச்சி பொதுமக்களை கோரியுள்ளது.
சமாதனத்தை இழக்கும் நிலை ஏற்படக் கூடாது -தயான் ஜயதிலக்க- 
சமாதானத்தை இழக்க வேண்டிய நிலைமை ஏற்படக் கூடுமென பிரான்ஸிற்கான முன்னாள் இலங்கைத் தூதுவரும் சிரேஸ்ட ராஜதந்திரியுமான கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமக்கு நெருக்கமானவர்களுக்கு தேவையற்ற வகையில் அதிகாரங்களை பரவலாக்கியுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
அரசாங்கத்தினை வழிநடத்தும் கொள்கைகளை யார் வகுக்கின்றார்கள் என்பது தமக்குப் புரியவில்லை என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டமை மிகப் பாரிய வெற்றியாகவே கருதப்பட வேண்டும் எனவும் அதில் மாற்றுக் கருத்து கிடையாது எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். எவ்வாறெனினும் யுத்த நிறைவின் மூலம் நிலையான சமாதானத்தை ஏற்படுத்த எமக்குக் கிட்டிய அரிய வாய்ப்புக்கள் பல கைநழுவ விடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சீனாவைப் போன்றே ஆசிய பிராந்திய வலயத்தில் இந்தியாவும் முக்கியமான நாடு எனவும், அதனை ஆளும் தரப்பினர் சரியாக புரிந்து கொள்ளத் தவறியுள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
1967ம் ஆண்டு இஸ்ரேல் பாரிய இராணுவ வெற்றியை ஈட்டியதாகவும் அப்போதைய அரசியல் தலைமை சமாதானத்திற்கான வழிகளை ஏற்படுத்தத் தவறியதன் விளைவுகள் இன்று வரையில் துன்பியல் அனுபவமாக தொடர்கின்றது எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளை துரித கதியில் அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
யுத்தத்தை வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டு வந்த போதிலும் ஜனாதிபதி தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண உரிய முனைப்பு எடுக்கத் தவறியுள்ளதாக தயான் ஜயதிலக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
 

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger