ஈரான் அதிபர் முகமத் அகமதிநிஜாத் தற்போது இரண்டு முறையாக அதிபர் பதவியைவகித்து வருகிறார். ஈரான் அரசியலமைப்பு சட்டப்படி ஒருவர் தொடர்ந்து மூன்றாவது முறையாக அதிபராக பதவிவகிக்க முடியாது.
வரும் ஜூன் மாதம் 14-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்பாளர்கள் பதிவு இன்று தொடங்கி 5 நாட்கள் நடைபெற இருக்கிறது. இதில் 18 வயது நிரம்பிய யாரும் பதிவு செய்யலாம்.
மே 23-ம் தேதிக்குள் இறுதி போட்டியாளர்கள் பட்டியல் வெளியிடப்படும். 2009-ம் ஆண்டு 475 ஈரான் நாட்டினர் பதிவு செய்தனர். இவர்களில் 4 பேர் மட்டுமே இறுதி வேட்பாளர் பட்டியலில் இடம் பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment