செல்போனுக்கு மீள் நிரப்பல் மூலம் கப்பம் பெற்றவர்கள் கைது-சிறைச்சாலையில் இருந்தவாறு கொலை மிரட்டல் விடுத்து வர்த்தகர்களிடம் கப்பம் பெற்ற இரண்டு பேரை கொழும்பு மிரிஹான விசேட குற்றத் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
நுகேகெடை பிரதேசத்தைச் சேர்ந்த 20 வர்த்தகர்களிடம் கப்பம் பெறப்பட்டமை தொடர்பிலும் முறைப்பாடுகள் கிடைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறைச்சாலைக்குள் இருந்தவாறே கையடக்கத் தொலைபேசிகளுக்கு மீள் நிரப்பு கட்டணமாக சந்தேகபநபர்கள் கப்பம் பெற்றுள்ளமை தெரிய வந்துள்ளது.
தமது கைடயக்கத் தொலைபேசிக்கு மீள் நிரப்பப்பட்ட பணத்தை சிறைச்சாலைக்கு வெளியேயுள்ளவர்களின் கையடககத் தொலைபேசிகளுக்கு அனுப்பி அவர்களின் ஊடாக சந்தேகநபர்களின் மனைவியருக்கு பணம் வழங்கப்பட்டுள்ளமை விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் வாத்தூவ பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரும் பிலியந்தலையைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பில் ஹெரோயினுடன் ஒருவர் கைது-கொழும்பு, கிரேண்ட்பாஸ் சேதவத்தைப் பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றிற்கு அருகில் ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து 74 கிராமும், 700 மில்லிகிராமும் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட ஹேரோயின் ஆறு இலட்சம் ரூபா பெறுமதியானது என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளின் பொருட்டு சந்தேகநபர் பொலிஸ் போதைப்பொருள் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
300 மணித்தியால கட்டாய சமூக சேவைத் தண்டனை- அரச காணியில் சட்ட விரோதமாக இரத்தினக்கல் அகழ்ந்த நபருக்கு பிபிலை மஜிஸ்திரேட் நீதி மன்றம் முன்னூறு மணித்தியாலங்கள் கட்டாய சமூக சேவையில் ஈடுபட வேண்டுமென தீர்ப்பளித்துள்ளது. பிபிலையைச் சேர்ந்த மொகமட் ரியாஸ் என்பவருக்கே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பிபிலைப் பகுதியின் அரச காணியொன்றில் சட்ட விரோதமாக இரத்தினக் கல் அகழ்வதாகக் கிடைத்த தகவலொன்றின் பேரில் பிபிலைப் பொலிஸார் குறிப் பிட்ட இடத்தினை சுற்றிவளைத்து இந் நபரைக் கைது செய்துள்ளனர்.
Post a Comment