ரஜினி, கமல், விஜய் படங்களை இலங்கையில் திரையிடக் கூடாது… மீறினால் திரையரங்குகள் முற்றுகை / வங்கியில் அடகு வைத்த நகையை மீட்டபோது போலி / மேம்பாலங்களில் பாரமேற்றிய வாகனங்களுக்கு தடை


 

ind.cinemaரஜினி, கமல், விஜய் படங்களை இலங்கையில் திரையிடக் கூடாது… மீறினால் திரையரங்குகள் முற்றுகை: ராவண சக்தி அமைப்பு
ரஜினி, கமல், சரத்குமார் மற்றும் விஜய் ஆகிய தென்னிந்திய நடிகர்களின் படங்களை இலங்கையில் திரையிடக் கூடாது என ராவண சக்தி இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தைக் கோரியுள்ளது.
இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்திற்கு முன்பாக, நேற்று (08.05.2013) இது தொடர்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது ராவண சக்தி அமைப்பு.
மேலும் தென்னிந்திய நடிகர்களின் படங்களின் மீதான தடை குறித்த கோரிக்கை கடிதமொன்றையும் இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்திடம் கையளித்துள்ளது.
இது குறித்து ஊடகவியலாளர்களிடம் அவ்வமைப்பின் ஏற்பாட்டாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் கூறுகையில், தற்போது தமிழகத்திற்கு இலங்கையர்களால் செல்ல முடியவில்லை. தேரர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்டுகின்றது. இவற்றுக்கு எதிர்ப்பை வெளிக்காட்டுவதை விடுத்து இலங்கைக்கு எதிராக செயற்பாடுகளை தென்னிந்திய நடிகர்கள் முன்னெடுக்கின்றனர்.
எனவே அவர்களது படங்களை இலங்கையில் திரையிட வேண்டிய அவசியமில்லை.
தென்னிந்திய நடிகர்களான குறிப்பாக ரஜினி மற்றும் கமல் படங்களைத் தடைசெய்யவேண்டும். மேலும் சரத்குமார் மற்றும் விஜய் ஆகியோரும் இலங்கைக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்துவருவதனால் அவர்களது படங்களையும் இலங்கையில் திரையிடக்கூடாது. மீறி திரையிட்டால் திரையரங்குகள் முற்றுகையிடப்படும்.
இது தொடர்பில் இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்திற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளோம். அக்கடிதத்திற்கு எங்களுக்கு சாதகமான பதிலே கிடைத்துள்ளது எனத் தெரிவித்தார்.
வங்கியில் அடகு வைத்த நகையை மீட்டபோது போலியானது-
தேசிய சேமிப்பு வங்கியின் நீர்கொழும்பு கிளையில் அடகு வைக்கப்பட்ட நகையை அடகு வைத்த பெண் மீட்டபோது அதில் ஒரு நகை போலியாக இருப்பதைக் கண்டு நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். நீர்கொழும்பு கடோல்கலே பிரதேசத்தைச் சேர்ந்த ஐவன் என்ற பெண்னே பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தவராவார்.
தனது பிள்ளையின் இரண்டு பவுண் கொண்ட தங்கச் சங்கிலி மற்றும் ‘பிரேஸ்லட்’ என்பவைகளை குறித்த பெண் மீட்டு வீடு வந்த போது அதில் ‘பிரேஸ்லட்’ போலியாக இருப்பதை அவரது கணவர் கண்டுள்ளார். பின்னர் இது தொடர்பாக குறித்த வங்கியில் எழுத்து மூலம் முறைப்பாடு செய்ததுடன், நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்திலும் அவர்கள் கடந்த திங்கட்கிழமை முறைப்பாடு செய்துள்ளனர்.
இது தொடர்பாக குறித்த பெண்ணின் கணவர் தெரிவிக்கையில், தேசிய சேமிப்பு வங்கியின் நீர்கொழும்பு கிளையில் பத்து இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளை எனது மனைவி கடந்த ஒரு வருட காலத்தில் அடகு வைத்திருந்தார். அதில் 5 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளை நாங்கள் இது வரை மீட்டுள்ளளோம்.
கடந்த திங்கட்கிழமை எனது மகளின் இரண்டு பவுண் கொண்ட தங்கச் சங்கிலி மற்றும் ‘பிரேஸ்லட்’ என்பவைகளை மீட்டு வீடு வந்த போது, அதில் ‘பிரேஸ்லட்’ போலியாக இருப்பதை நான் கண்டு பிடித்தேன் இது அந்த நகையை வாங்கிய நகை கடையிலும் உறுதிப்படுத்தப்பட்டது.
இது தொடர்பாக வங்கியில் எழுத்து மூலமாக முறைப்பாடு செய்தோம். வங்கியின் தலைமையகத்திற்கும் இது தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினமும் வங்கிக்கு அழைத்து எம்மை விசாரித்தனர் என்று தெரிவித்துள்ளார்.
மேம்பாலங்களில் பாரமேற்றிய வாகனங்களுக்கு தடை-
மேம்பாலங்கள் வழியாக அதிக பாரமேற்றிய வாகனங்கள் செல்லக்கூடாது என வீதி அபிவிருத்தி அதிகார சபை எச்சரித்துள்ளது.
அண்மையில் யானை ஒன்றை ஏற்றி வந்த வாகனமொன்று தெஹிவளை மேம்பாலத்தின் மேலாக சென்ற போது அவ்விடத்திலிருந்த பொலிஸார் அதை கண்டுகொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
மேம்பாலத்தின் மீது செல்லும் வாகனங்களின் நிறை கண்கானிக்கும் அதிகாரம் பொலிஸாருக்கு உண்டு என வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் ஜீ.பண்டார தெரிவித்துள்ளார்.
ஒரு மேம்பாலத்தினால் 40 தொன் வாகனத்தை தாங்க முடியும். ஆயினும் எந்தவொரு பார ஊர்தியும் மேம்பாலத்தினால் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. ஏனெனில் அவை மேம்பாலங்களின் பயன்பாடு காலத்தை குறைத்துவிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger