காதலியை தாக்கி, கணவரை கயிற்றால் கட்டி ஆட்டோவில் கொண்டு சென்ற மனைவி / மத்தல விமான நிலையத்தை எயார் அராபியா கைவிட்டதாம் / 242 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்


 

newsaa-001காதலியை தாக்கி, கணவரை கயிற்றால் கட்டி ஆட்டோவில் கொண்டு சென்ற மனைவி-தனது கணவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த பெண்ணின் வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்து கணவரையும் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படும் பெண்ணையும் கடுமையாகத் தாக்கிய மனைவி, கணவரை கயிற்றால் கட்டி முச்சக்கர ஆட்டோ வண்டியில் கொண்டு சென்றுள்ளார்.
கணவரை கயிற்றால் கட்டி கடத்திச் சென்றவை மற்றும் அவருடன் தொடர்பு வைத்திருந்த பெண்ணின் வீட்டுக்குள் அத்துமீறிப் புகுந்து அவர் மீது தாக்குதல் நடத்தியது கம்பஹா, பெம்குள்ளவைச் சேர்ந்த பெண்ணாவார்.
இது தொடர்பான வழக்கில் குறித்த பெண்ணை ஐயாயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் இரண்டு இலட்சம் ரூபா சரீரப்பிணையிலும் செல்ல அனுமதிக்குமாறு நீர்கொழும்பு நீதிவான் ஏ.எம்.என்.பீ. அமரசிங்க உத்தரவிட்டார்.
மத்தல விமான நிலையத்தை எயார் அராபியா கைவிட்டதாம்-இலங்கையில் புதிதாக திறக்கப்பட்ட மத்தல மஹிந்த ராஜபக்ஷ விமான நிலையத்தில் தமது சேவைகளை ஆரம்பித்த எயார் அராபியா விமான நிறுவனம் சேவைகளை இரத்து செய்ய தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
2013 மே மாதம் தொடக்கம் எயார் அராபியா விமான நிறுவனம் தமது மத்தல விமான சேவைகளை இரத்து செய்கிறது. மத்தல விமான நிலையம் திறக்கப்பட்டு முதல் சர்வதேச விமான சேவையாக எயார் அராபியா தமது சேவையை தொடங்கியமை குறிப்பிடத்தக்கது.
6 வார கால சேவையின் பின் இந்த சேவை இரத்து முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. எயார் அராபியா மத்தல விமான நிலையத்தில் இருந்து வாராந்தம் இரண்டு விமான சேவைகளை செயற்படுத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.
வானூர்தி அனுமதி ஒதுக்கீடுகளும் தற்போது இடம்பெறவில்லை என்று அராபிய இணையத்தளங்கள் தெரிவித்துள்ளன. கடந்த மார்ச் மாதம் 18 ம் திகதியிலிருந்து வாராந்தம் 2 தடவைகள் மத்தள ஊடான வானூர்தி சேவை எயார் அரபியா மேற்கொண்டு வந்தது.
இதனிடையே, எதிர்வரும் 19 ஆம் திகதியிலிருந்து மத்தள – சார்ஜாவுக்கு இடையிலான வானூர்தி சேவைகளை வாரத்திற்கு நான்கு தடவைகளாக அதிகரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக எயார் அரபியா தெரிவித்துள்ளது.
242 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்-242 பட்டதாரிகளுக்கு கிழக்கு மாகாண சபையினால் ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. திருகோணமலையிலுள்ள கிழக்கு மாகாண கல்வி அமைச்சில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றின் போது இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது. மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காகவே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
55 சிங்கள மொழி மூல ஆசிரியர்களும் 187 தமிழ் மொழி மூல ஆசிரியர்களும் மாவட்ட வேலைத்ததிட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஜனவரி மாதம் கிழக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் கூடிய புள்ளிகளைப் பெற்றவர்களுக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ.மஜீத், மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திசாநாயக்க, சபை தவிசாளர் ஆரியவதி கலபதி மற்றும் மாகாண கல்வி பணிப்பாளர் ரீ.எம்.நிசாம் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
 

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger