பிக்கு தீக்குளித்தமைக்கு ஐ.தே.கட்சி கவலை / சுவிஸ் சுற்றுலாப்பயணிகள் கைட் போட்டில் கடல் மார்க்கமாக தலைமன்னார் வருகை / அரசின் முயற்சிக்கு வடமத்திய மாகாண சபையில் எதிர்ப்பு

 

பிக்கு தீக்குளித்தமைக்கு ஐ.தே.கட்சி கவலை-
கண்டி தலதா மாளிகைக்கு முன்னால் அண்மையில் பிக்கு ஒருவர் தீ மூட்டி தற்கொலை செய்தமைக்கு பிரதான எதிர்க்கட்சி என்றவகையில் ஐக்கிய தேசியக் கட்சி கவலை வெளியிட்டுள்ளது.
இராஜகிரியவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் பொதுச் செயலாளருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
தலதா மாளிகைக்கு முன்னால் அண்மையில் பிக்கு ஒருவர் தீ மூட்டி தற்கொலை செய்தமைக்கு ஐக்கிய தேசியக் கட்சி கவலை தெரிவிக்கின்றது.
இது குறித்து அரசு பாராமுகமாகவுள்ளதுடன் ஊடகவியலாளர்கள் மீது விசாரணைகளை மேற்கொண்டு சம்பவத்தை திசை திருப்ப எத்தனிக்கின்றது.
இந்நாட்டில் இடம்பெற்ற வெள்ளைக்காரர்களின் ஆட்சியில் கூட இவ்வாறான சம்பவம் இடம்பெறவில்லை. தற்போதைய ஆட்சியில் இவ்வாறான சம்பவம் ஒன்று இடம்பெறுகின்றதென்றால் மிகவும் சந்தேகத்திற்கு இடமானது.
இதற்கான விசாரணைகளை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சுவிஸ் சுற்றுலாப்பயணிகள் கைட் போட்டில் கடல் மார்க்கமாக தலைமன்னார் வருகை-
இந்தியாவில் இருந்து வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் 4 பேர் ‘கைட் போட்’ ஐ பயன்படுத்தி கடல் மார்க்கமாக முதல் முறையாக இன்று செவ்வாய்க்கிழமை மதியம் தலைமன்னார் கடற்பரப்பை வந்தடைந்துள்ளனர்.
சுவிற்சர்லாந்தைச் சேர்ந்த குறித்த நான்கு பேரும் இந்தியாவிற்குச் சென்ற நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில் இந்தியா தனுஸ்கோடி கடற்கரையில் இருந்து ‘கைட் போட்’ ஐ பயன்படுத்தி தலைமன்னாரை நோக்கி தமது பயணத்தை ஆரம்பித்தனர்.
இவர்களுடைய கடல் மார்க்கமான பயணத்திற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதியை வழங்கி இருந்தது. இன்று மதியம் 12.30 மணியளவில் தலைமன்னார் கடற்கரையை வந்தடைந்த இவர்கள் தலைமன்னாருக்கு வருவதற்கான சகல ஏற்பாடுகளையும் எழிமன்ஸ் அமைப்பின் முகாமையாளர் ஜெரோம் பெனாண்டஸ் மேற்கொண்டிருந்தார்.
இவர்களுடைய வருகையை பதிவு செய்யது விசாரனைகளை மேற்கொள்ள குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரி எஸ்.யசோதன், சுங்கத்திணைக்கள அதிகாரிகளான என்.எஸ்.குமார நாயக்க, என்.வீரசிங்க ஆகியோர் தலைமன்னார் கடற்கரைக்குச் சமுகமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அரசின் முயற்சிக்கு வடமத்திய மாகாண சபையில் எதிர்ப்பு-
மாகாண சபை முறைமையை நீக்கிவிடுவதற்கு அரசாங்கத்தினால் எடுக்கப்பட்டுவரும் முயற்சிகளுக்கு வடமத்திய மாகாண சபையில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடமத்திய மாகாண சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்களே இவ்வாறு கறுப்பு பட்டிகளை கட்டிக்கொண்டு இன்று எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பினால் சபை நடவடிக்கைகள் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
 

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger