கென்யாவில் கத்தோலிக்கர்கள் கருத்தரிப்பு தடுப்பு உறைகளைப் பயன்படுத்த வலியுறுத்தும் ஒரு விளம்பரம் அகற்றப்படவேண்டும் என்று அந்நாட்டில் உள்ள ரோமன் கத்தோலிக்க ஆயர்கள் கோரியிருக்கின்றனர்.
அமெரிக்காவிலிருந்து இயங்கும் ரோமன் கத்தோலிக்க பிரச்சாரக் குழு ஒன்றால் வெளியிடப்பட்டிருக்கும் இந்த விளம்பரத்தில், புன்னகை செய்து கொண்டிருக்கும் ஒரு தம்பதியினருடன், " நல்ல கத்தோலிக்கர்கள் கருத்தரிப்பு தடுப்பு உறையைப் பயன்படுத்துகின்றனர்" என்ற வாசகங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
இந்த விளம்பரம் கத்தோலிக்க மதத்தை துஷ்பிரயோகம் செய்கிறது என்றும் ஒழுக்கமற்ற நடத்தையை ஊக்குவிக்கிறது என்றும் ஆயர்கள் கூறுகிறார்கள்.
இந்த விளம்பரம் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட கென்யர்களைப் பாதிக்கும் எச்.ஐ.வி தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கிலானது.
திருமணமான பெண்களை கருத்தடை உறைகளை பயன்படுத்துமாறு கோரிய கென்ய தொலைக்காட்சியொன்றில் சமீபத்தில் வெளியான விளம்பரம் ஒன்று மதக்குழுக்களிடமிருந்து எழுந்த எதிர்ப்புகளை அடுத்து விலக்கிக்கொள்ளப்பட்டது.
Post a Comment