குர்து இன பிரிவினைவாத இயக்கமான பிகேகே அமைப்பின் உறுப்பினர்கள் தாம் உடன்பட்டது போல துருக்கியில் இருந்து வெளியேறத் தொடங்கியிருப்பதாக குர்துக் கட்சி தலைவர்கள் கூறியுள்ளனர்.
ஆயிரக்கணக்கானோர் பலியாகக் காரணமான மூன்று தசாப்தகால மோதலுக்கு ஒரு முடிவை நோக்கியதாக இந்த நகர்வு பார்க்கப்படுகிறது.
தடை செய்யப்பட்ட இந்த இயக்கத்தின் 1500 அல்லது அதற்கும் அதிகமான போராளிகள் கால்நடையாக வடக்கு இராக்கில் உள்ள தமது தளங்களுக்கு செல்கிறார்கள்.
மூன்று அல்லது நான்கு மாதங்களில் இந்த முழுமையான பின்வாங்கல் முற்றுப்பெறும்.
ரகசியமாக நடந்த பேச்சுவார்த்தைகளை அடுத்து உருவான ஒரு சரித்திர முக்கியத்துவம் மிக்க போர்நிறுத்தத்துக்கு வலுச் சேர்க்கும் வகையில் சிறையில் இருக்கும் பிகேகே தலைவரான அப்துல்லாஹ் ஒகலன் அவர்கள் இந்தப் பின்வாங்கலை செய்யுமாறு மார்ச் மாதத்தில் கேட்டிருந்தார்.
பின்வாங்கிச் செல்லும் போராளிகளுக்கு எந்தவிதமான தீங்கும் செய்யப்படாது என்று கூறிய துருக்கிய பிரதமர் ரெசப் தைப் எர்தோவன் அவர்கள், போராளிகள் தமது ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.
Post a Comment