அமெரிக்கா தலைமையிலான பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் தமது நாட்டின் பங்களிப்பு முடிவுக்கு கொண்டுவரப்படும் என்று பாகிஸ்தானின் அடுத்த பிரதமராக வருவார் என்று வெகுவாக எதிர்பார்க்கப்படும் நவாஷ் செரிப் பிபிசியிடம் கூறியுள்ளார்.
பாகிஸ்தானிலும், உலகின் ஏனைய பகுதிகளிலும் அமைதி திரும்ப வேண்டுமானால், அந்த நடவடிக்கை அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆனால், தலிபான்களுக்கும் அல்கைதாவுக்கும் எதிரான நடவடிக்கைகளை தாம் நிறுத்துவோமா, இல்லையா என்பது குறித்து அவர் எதுவும் கூறவில்லை.
2014 ஆம் ஆண்டில் வெளிநாட்டுப் படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து முழுமயாக வெளியேறத் தயாராகிவரும் நிலையில், இந்த நகர்வு, பாகிஸ்தானில் தீவிரவாதிகள் சுதந்திரமாக செயற்பட வழி செய்துவிடுமோ என்று மேற்கத்தைய தலைவர்கள் கவலையடையலாம் என்று இஸ்லாமாபாத்துக்கான பிபிசியின் செய்தியாளர் கூறியுள்ளார்.
செப்டம்பர் 11 தாக்குதலுக்கு பின்னர் அமெரிக்கா தலைமையில் இஸ்லாமிய தீவிரவாதத்துக்கு எதிராக நடக்கும் போரில் பாகிஸ்தானின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும்.
பாகிஸ்தானில் சனிக்கிழமை நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவுள்ளது.
Post a Comment