சீனாவின் முன்னோடி திரைப்பட இயக்குநர் , ஷாங் யிமூ, சீனாவின் கடுமையான குடும்பக்கட்டுப்பாட்டு சட்டங்களை மீறியது குறித்து சீன அதிகாரிகள் விசாரணை செய்து வருகிறார்கள்.
பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் பிரமிக்க வைத்த துவக்க விழா நிகழ்ச்சிகளை இயக்கியவர் ஷாங் யிமூ.
ஷாங் நான்கு பெண்கள் மூலம் ஏழு குழந்தைகளுக்குத் தந்தையாகியிருக்கிறார் என்று அரச ஊடகங்கள் கூறின.
சீனச் சட்டத்தின்கீழ், ஒரு குழந்தைக்கு மேல் பெற்ற தம்பதியினர் தண்டிக்கப்படலாம். கிராமப்புறங்களில் வசிக்கும் குடும்பங்கள் தங்கள் முதல் குழந்தை பெண்ணாக இருக்கும் நிலையில் இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்படுகின்றன.
ஷாங்குக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 20 மிலியன் டாலருக்கு மேற்பட்ட தொகை அபரதமாக விதிக்கப்படக்கூடும்.
Post a Comment