பெல்ஜியம் விமான நிலையத்தில் வைரங்களை கொள்ளையடித்த 31 பேர் கைது
பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் நகரில் உள்ள விமானநிலையத்தில், வைக்கப்பட்டிருந்த 50 மில்லியன் டாலர் மதிப்புள்ள வைரங்களை கொள்ளையடித்த 31 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆண்ட்வெர்ப் நகரிலிருந்து, ஜுரிச் நகருக்கு எடுத்துச் செல்வதற்காக பட்டை தீட்டப்படாத வைரங்கள், கடந்த மாதம் பிரஸ்ஸல்ஸ் விமான நிலையம் கொண்டு வரப்பட்டு, விமானத்தில் ஏற்றப்பட்டிருந்தது. அந்த வைரங்களுடன் சுவிட்சர்லாந்து நாட்டு விமானமும் புறப்படுவதற்காக விமான தளத்தில் தயாராக இருந்தது.
அப்போது, காவல்துறையினர் போல் உடையணிந்தும், முகமூடிகளால் முகத்தை மறைத்தும் வந்திருந்த ஒரு கும்பல், பாதுகாப்பு வேலியை விலக்கி, விமானத் தளத்திற்குள் வந்துள்ளது.
பாதுகாப்புத் தடைகளை மீறி, ஹெல்வெடிக் ஏர்வேஸ் விமானம் நின்றிருந்த பகுதியை அந்தக் கும்பல் அடைந்தது. விமானத்தில் உடைமைகள் இருக்கும் பகுதியைத் திறந்து, வைரங்கள் இருந்த பெட்டியிலிருந்து, 120 பொட்டலங்களை எடுத்துக்கொண்டு வந்த வழியே திரும்பிச் சென்றுள்ளது.
ஐந்து நிமிடத்திற்குள் இந்த செயல்கள் நடந்து முடிந்துள்ளன. யாருக்கும் எந்தத் தீங்கும் ஏற்படாமல், துப்பாக்கிகள் பயன்படுத்தப்படாமல் இந்தக் கொள்ளை நடந்துள்ளது. உலகிலேயே மிகப் பெரிய கொள்ளைகளுள் ஒன்றாக, அந்த சம்பவம் கருதப்பட்டது
இந்த கொள்ளையர்களை பிடிக்க பெல்ஜியம், ஸ்விட்சர்லாந்து, பிரான்ஸ் நாட்டுக் காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் இறங்கினர். இதில், கொள்ளையர்களில் ஒருவன் பிரான்சிலும், 6 பேர் சுவிட்சர்லாந்திலும் நேற்று கைது செய்யப்பட்டனர். மீதி 24 பேர் இன்று பிரஸ்ஸல்ஸ் நகர் அருகில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ஏராளமான பணமும், வைரங்களும் மீட்கப்பட்டுள்ளன.
டயானா பயன்படுத்திய சொகுசு கார் ஜுன் 29-ந்தேதி ஏலம்-
இங்கிலாந்து இளவரசர் சார்லசின் மனைவி டயானா, 1997ம் ஆண்டு கார் விபத்தில் மரணமடைந்தார். அவர் உயிருடன் இருந்தபோது 1994ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட ‘ஆடி கேப்ரியோலெட்’ என்ற பச்சை நிற சொகுசு காரை பயன்படுத்தி வந்தார்.
இங்கிலாந்து இளவரசர் சார்லசின் மனைவி டயானா, 1997ம் ஆண்டு கார் விபத்தில் மரணமடைந்தார். அவர் உயிருடன் இருந்தபோது 1994ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட ‘ஆடி கேப்ரியோலெட்’ என்ற பச்சை நிற சொகுசு காரை பயன்படுத்தி வந்தார்.
ஓய்வு நேரங்களில் குழந்தைகளை ஏற்றிக் கொண்டு லண்டன் வீதிகளில் இந்த காரை ஓட்டியபடி டயானா நகர்வலம் வந்த காட்சிகள் இன்னும் பலரது மனத்திரையில் இருந்து விலகவில்லை.
டயானாவின் மறைவுக்கு பின்னர் பயன்படுத்தப்படாமல் உள்ள இந்த சொகுசு கார் இதுவரை 21 ஆயிரம் மைல் தூரம் மட்டுமே ஓடியுள்ளது.
சுமார் 15 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டயானாவின் காரை லண்டனில் உள்ள ஏல நிறுவனம் வரும் ஜுன் மாதம் 29ம் தேதி ஏலத்தில் விட உள்ளது.
குறைந்தபட்ச ஏலத் தொகையாக 25 ஆயிரம் பவுண்டுகள் (இந்திய மதிப்புக்கு சுமார் ரூ.2 கோடியே 8 லட்சம்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஏலத்தில பங்கேற்பவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, சுமார் 50 ஆயிரம் பவுண்டுகள் வரை இந்த கார் விலை போகலாம் என ஏல நிறுவன அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கிறார்.
Post a Comment