|
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இளையமகன் ரோஹித்த ராஜபக்ச நேற்று இடம்பெற்ற ரக்பி போட்டி ஒன்றின்போது போட்டி நடுவரை தாக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பு ஹெவலொக் மைதானத்தில் இலங்கை ரக்பி கால்பந்தாட்ட ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த 7 அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று இடம்பெற்றது. போட்டியில் பொலிஸ் அணி, கடற்படை அணியை தோற்கடித்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதியின் இளைய மகன் ரோஹித்த கடற்படையை சேர்ந்தவர் அல்ல என்ற போதும் அவரே நேற்றைய போட்டியின் போது கடற்படை ரக்பி அணிக்கு தலைமை தாங்கினார். வழமையாக அவரது சகோதரரான யோசித்த ராஜபக்சவே கடற்படை ரக்பி அணிக்கு தலைமை தாங்கி வருகிறார். இந்தவேளையில் நேற்று தலைமை தாங்கிய ரோஹித்த, போட்டி நடுவராக செயற்பட்ட திமிரி குணசேகரவின் சட்டைக்கொலரை பிடித்து பார்வையாளர்கள் முன்னால் தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதன்பின்னர் குறித்த போட்டி சுமார் 40 நிமிடங்கள் நிறுத்தப்பட்டு ஆரம்பிக்கப்பட்டதாக ஆங்கில செய்தி பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.
|
ரக்பி போட்டி நடுவரை தாக்கிய மகிந்தவின் இளைய மகன்!
Related Articles
- எரிந்து நாசமான நோலிமிட் தொடர்பில் புதிய வீடியோ அம்பலம் (வீடியோ இணைப்பு)
- வர்த்தக நிலையத்தில் கொள்ளையடிக்க முயன்ற கும்பல் மடக்கிப் பிடிக்கப்பட்டது - மாவனல்லையில் சம்பவம் (VIDEO)
- ஆறு மாத காலத்திற்குள் 30 ஆயிரம் கோடி ரூபா ஊழல்!
- 30 பாலியல் இணையக்குற்றவாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர் : சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை
- சந்தேக நபரைத் தாக்கி முகத்தில் சிறுநீர் கழித்த சிலாபம் பொலிஸார்
- 10வருடங்களாக இலங்கை சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்து வந்த பிரான்ஸ் நாட்டவர் இலங்கைக்கு வந்த பிரான்ஸின் விசேட பொலிஸ் குழுவினால் அம்பலமான கதை..
Labels:
குற்றங்கள்
Post a Comment