கம்பஹாவில் விபசார விடுதி முற்றுகை / யுத்த வெற்றி விழா நிகழ்வுகள் 8ம் திகதி முதல் ஜூன் 08 வரை கொண்டாட்டம்!


 

prosteist-001கம்பஹாவில் விபசார விடுதி முற்றுகை-
யக்கல பகுதியில் பாலியல் தொழிலாளர்கள் எனக் கருதப்படும் பெண்கள் மூவரையும் மற்றுமொருவரையும் கம்பஹா பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
யக்கல பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்று திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போதே, இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த வீடு பாலியல் தொழிலுக்காக மிக நீண்டகாலமாக நுட்பமான முறையில் பயன்படுத்தப்பட்டு வந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
21, 23, 43 வயதுடைய பெண்கள் மூவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் குருநாகல், வலவ்வத்த, சதிக்காவத்த ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இந்தச் சந்தேக நபர்களை கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
யுத்த வெற்றி விழா நிகழ்வுகள் 8ம் திகதி முதல் ஜூன் 08 வரை கொண்டாட்டம்!
2013 ம் ஆண்டுக்கான தேசிய யுத்த வீரர்கள் மாதம் நாளை 8ம் திகதி முதல் ஜூன் மாதம் 8ம் திகதி வரை அனுஷ்டிக்கப்படவுள்ளது.
இதனை முன்னிட்டு தயாரிக்கப்பட்டுள்ள “தாய் நாட்டு யுத்த வீரர்களுக்கான தேசத்தின் மரியாதை” என்ற வாசகம் பொறிக்கப்பட்ட முதலாவது கொடியை நாளை அலரி மாளிகையில் வைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களுக்கு அணிவித்ததை தொடர்ந்து தேசிய யுத்த வீரர்கள் மாதம் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தேசிய யுத்த வீரர்கள் மாதத்தை முன்னிட்டு கொழும்பு உட்பட நாடு முழுவதிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கொள்ளுபிட்டியிலுள்ள தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் அதன் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்ல தலைமையில் நேற்றுக் காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் மேலும் கருத்து தெரிவிக்கையில்:-
தாய்நாட்டை விடுதலைப்புலிகளிடம் இருந்து பாதுகாத்து படை வீரர்களுக்கு உலகின் எந்த ஒரு நாட்டிலும் இல்லாத வகையில் கெளரவத்தையும் நலன்புரி வசதிகளையும் அரசாங்கம் செய்துகொடுத்துள்ளது.
நாட்டிற்கு சமாதானத்தை பெற்றுத் தந்து ஒருமைப்பாட்டை ஏற்படுத்திய படை வீரர்களுக்கும் அவர்களது பிள்ளைகள் மற்றும் குடும்ப உறவினர்களுக்கு பாதுகாப்பு அமைச்சும், ரணவிரு சேவை அதிகார சபையும் பல்வேறு வேலைத் திட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறது.
இதன் ஓர் அங்கமாகவே வருடாந்தம் மே மாதம் 8ம் திகதி முதல் ஜூன் மாதம் 8ம் திகதி வரையான காலத்தை தேசிய யுத்த வீரர்கள் மாதமாக அனுஷ்டித்து வருகின்றோம்.
தாய் நாட்டுக்காக தம்மை அர்ப்பணித்த படை வீரர்களை கெளரவிப்பதும் நாட்டில் சமாதானம் நிலவுவதை ஞாபகப்படுத்துவதுமே இதன் நோக்கமாகும்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களின் தலைமையில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் பங்குபற்றலுடன் கொழும்பில் பிரதான வைபவங்கள் இடம்பெறவுள்ளதுடன், 9 மாகாணங்களிலும் மாகாண ஆளுநர்கள், முதலமைச்சர்கள் தலைமையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
11ம் திகதி வட மாகாணத்திற்கான நிகழ்வு கிளிநொச்சி படை வீரர் ஞாபகார்த்த நிறைவு தூபிக்கு அருகிலும், 14ம் திகதி கிழக்கு மாகாணத்திற்கான நிகழ்வு திருகோணமலை கோட்டையிலும், வட மத்திய மாகாணத்திற்கான நிகழ்வு அநுராதபுரம் படைவீரர் ஞாபகார்த்த நினைவு தூபிக்கு அருகிலும் இடம்பெறவுள்ளன.
மத்திய மாகாண நிகழ்வு கண்டி மைலபிட்டி மைதானத்திலும், 16ம் திகதி தென் மாகாண நிகழ்வு காலியிலும், வட மேல் மாகாணத்திற்கான நிகழ்வு குருநாகல் மாளிகாபிட்டிய மைதானத்திலும், சப்ரகமுவ மாகாணத்திற்கான நிகழ்வு இரத்தினபுரியிலும் இடம்பெறவுள்ளன என்றார்.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger