பர்மாவில் மீண்டும் புத்த மதத்தினர், முஸ்லிம்களிடையே மோதல் / அமெரிக்காவில் தடம் புரண்ட சரக்கு ரெயில் வெடித்து சிதறல் / ஐரோப்பிய யூனியனுக்கு போட்டியாக சிரியாவுக்கு ஏவுகணைகளை வழங்குகிறது ரஷ்யா

 

அமெரிக்காவில் தடம் புரண்ட சரக்கு ரெயில் வெடித்து சிதறல்-
அமெரிக்க பால்டிமோர் அருகே வந்துகொண்டிருந்த கார்கோ ரெயில், வொயிட் மார்ஷ் என்ற இடத்தில் குப்பை லாரியுடன் மோதியது. அப்போது அந்த ரெயிலின் 15 பெட்டிகள் தடம் புரண்டன.
இதில் எரிபொருட்களை ஏற்றிச்சென்ற அந்த ரெயிலின் பெட்டிகள் வெடித்து சிதறின. இதனால் அருகில் இருந்த வீடுகள் பிய்த்துக்கொண்டு விழுந்தன.
பின்னர் அவைகள் தீப்பிடித்து எரிந்தன. இதில் லாரி ஓட்டுனர் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த 5 ஆண்டுகளில் ஏற்பட்ட ரெயில் விபத்துகளில் 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
பர்மாவில் மீண்டும் புத்தமதத்தினர் முஸ்லிம்களிடையே மோதல்-
பர்மாவின் வடகிழக்கில் உள்ள ஷான் மாகாணத்தின் தலைநகர் லாஷியோவில் முஸ்லிம்கள் புத்தமதத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. புத்த மதத்தை சேர்ந்த ஒரு பெண்ணை மண்ணெண்ணை ஊற்றி முஸ்லிம் ஒருவர் எரித்ததாக வந்த செய்தியை அடுத்து இந்த கலவரம் ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இதனையடுத்து ஏற்பட்ட மோதலில் முஸ்லிம்களின் மசூதிகள் மற்றும் கடைகளுக்கு தீவைக்கப்பட்டது. இதனால் அப்பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டிருக்கிறது. சமீபத்தில் பர்மாவில் அவர்களிடையேயான மதக்கலவரத்தில் 200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பிய யூனியனுக்கு போட்டியாக சிரியாவுக்கு ஏவுகணைகளை வழங்குகிறது ரஷ்யா-
சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டுப்போரில் அதிபர் ஆசாத் படைக்கும் போராளிகள் குழுவுக்கும் இடையே கடுமையான சண்டை நடந்து வருகிறது. இதில் அதிபர் படைக்கு ரஷ்யா, ஈரான் போன்ற நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றனர்.
அதுபோல் போராளிகளுக்கு அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற மேற்கத்திய நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இரு தரப்புக்கும் வெளிநாட்டு உதவிகள் கிடைப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் சிரியாவில் சமநிலை திரும்ப போராளிகள் மீதான ஆயுதத்தடையை நீக்குவதாக ஐரோப்பிய யூனியன் அறிவித்தது. இதற்கு போட்டியாக, வெளிநாட்டு தலையீட்டை தடுக்க உதவியாக சிரியாவுக்கு தேவையான வான்வழிக்கண்காணிப்பு கருவிகள் மற்றும் ஏவுகணைகளை வழங்க முடிவு செய்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
மேலும் சிரியா போராளிகளின் மீதான ஆயுதத்தடையை ஐரோப்பிய யூனியன் நீக்கியுள்ளதற்கும் ரஷ்யா கண்டனம் தெரிவித்துள்ளது.
 

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger