ஆப்கனிஸ்தானில் பெருகி வரும் பெண் குற்றவாளிகள்-
தார்மீக குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை ஆப்கானிஸ்தானில் பெருகி வருகின்றது. தலிபான்களின் ஆட்சி கவிழ்ந்தபின் கடந்த 12 வருடங்களில் இந்த வருடம் அதிகப்படியான எண்ணிக்கையில், கிட்டத்தட்ட 600 பெண்களும், சிறுமிகளும் சிறையில் உள்ளதாக மனித உரிமைக் கண்காணிப்பு மையம் தெரிவிக்கின்றது.

கட்டாயத் திருமணம், கற்பழிப்பு போன்றவற்றினால் வீட்டைவிட்டு ஓடிப்போவது போன்ற குற்றங்களினால் தற்போது 600க்கும் மேற்பட்டவர்கள் சிறையில் உள்ளனர். கடந்த 18 மாதங்களில் இது 50 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
இந் நிலை, ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் அதற்கு உதவி புரியும் நாடுகளின் அரசியல் தோல்வியையே குறிக்கின்றது என்று இக்கழகத்தின் ஆசியக் கிளையின் துணை இயக்குனர் பெலிம் கினே தெரிவிக்கின்றார்.
பெண்கள் தங்களுடைய கல்வி மற்றும் வேலை குறித்த உரிமைகளை திரும்பப் பெற்ற போதிலும், நேட்டோ படைகள் அடுத்த வருடம் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் போது தங்களுடைய இந்த உரிமைகள் மீண்டும் பறிக்கப்படலாம் என்ற அச்சம் மக்களிடையே நிலவுகின்றது.
அதிபர் ஹமீத் கர்சாய் பெண்களின் பாதுகாப்பு குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டினை ஆப்கன் அரசு மறுத்துள்ளது.
பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகள் அதாவது கட்டாயத் திருமணம், சிறுவயதுத் திருமணம், கற்பழிப்பு, பெண்களை துன்புறுத்தல் போன்றவற்றிற்கு எதிராக 2009ல் அதிபர் கொண்டு வந்த தீர்மானத்தினை உறுதிப்படுத்த, தற்போதைய அரசு தவறி விட்டது.
இந்த சட்டத்தினை அவர்கள் சரிசெய்யா விட்டால், எதிர்காலத்தில் அதன் பாதிப்புகள் அதிகமாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர் ஹீதர் பார் எச்சரிக்கின்றார்.
இந்திய- ஆப்கானிஸ்தான் இருதரப்பு உறவுகளுக்கு அமெரிக்கா வரவேற்பு-
ஆப்கானிஸ்தானின் அதிபர் ஹமீது கர்சாய் மூன்று நாள் சுற்றுப்பயணமாக நேற்று இந்தியா வந்தார். நாட்டின் பாதுகாப்பில் இந்திய-ஆப்கானிஸ்தான் கூட்டு நடவடிக்கையை மேம்படுத்துவதே இந்த பயணத்தின் முக்கிய நோக்கமாகும்.

கர்சாய் ஆப்கானிஸ்தான் பாதுகாப்புக்காக இந்தியாவிடமிருந்து ஆயுத உதவிகளையும் எதிர்பார்க்கிறார்.
இந்நிலையில் இந்த சுற்றுப்பயணம் குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் பாட்ரிக் வென்ட்ரெல் கூறியதாவது:- ஆப்கானிஸ்தானின் பொருளாதார வளர்ச்சிக்கும், அரசியல் நிலைத் தன்மையை ஏற்படுத்தவும் அண்டை நாடுகள் மேற்கொள்ளும் முயற்சிகளை நாங்கள் வரவேற்கிறோம்.
இந்தியா பெருந்தன்மையாக ஆப்கானிஸ்தானுடன் இணைந்து, இருதரப்பும் பரஸ்பரம் உதவி செய்து கொள்ளும் வகையில் மேற்கொள்ளும் இந்த நடவடிக்கைகளை அமெரிக்கா வரவேற்கிறது.
இரு நாடுகளின் ராணுவ உறவு குறித்து சொல்ல எதுவும் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment