களனி பிரதேச சபைத் தலைவர் மீது தாக்குதல் / வவுனியாவில் வீடு புகுந்து ஆயுத முனையில் கொள்ளை / பிறப்பாணை பிறப்பிக்கப்பட்ட 15 பேர் கைது



 

fight-005களனி பிரதேச சபைத் தலைவர் மீது தாக்குதல்- 
களனி பிரதேச சபை தலைவர் பிரசன்ன ரணவீர மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. களனியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
களனி பிரதேச சபைத் தலைவருக்கும் மற்றுமொருவருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் இருவரும் காயமடைந்து கிரிபத்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
வவுனியாவில் வீடு புகுந்து ஆயுத முனையில் கொள்ளை-
வவுனியாவில் அதிகாலை வேளை வீடுபுகுந்த துப்பாக்கி தாரிகள் குடும்பஸ்தரின் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டி 12 பவுணுக்கும் மேற் பட்ட நகைகளைக் கொள்ளயைடித்துச் சென்றுள்ளனர். எனினும் இது குறித்து தாம் எவரையும் இதுவரை கைது செய்யவில்லை என்று வவுனியாப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் வவுனியா மன்னார் வீதியில் சோபால புளியங்குளம் பகுதியில் அண்மையில் இடம்பெற்றது. வீட்டின் சமையலறைப் புகைக் கூட்டை உடைத்து உள்நுழைந்தவர்கள் துப்பாக்கிகளை வீட்டில் இருந்தவர்களுக்குக் காட்டி பயமுறுத்த வேறு சிலர் வீட்டில் சகல அறைகளிலும் தேடுதல் நடத்தி 12 பவுணுக்கும் மேற்பட்ட நகைகளைக் கொள்ளையடித்துள்ளனர்.
வீட்டுக்காரர் அணிந்திருந்த சங்கிலி, தோடுகள் என்பனவும் கொள்ளையடிக்கப்பட்டன. ஆயுததாரிகள் துப்பாக்கிகளை மட்டுமன்றி கூரிய ஆயுதங்களையும் வைத்திருந்துள்ளனர் என்று கூறப்பட்டது.
இச் சம்பவம் இடம் பெறுவதற்கு சில நாள்களுக்கு முன்னர் சுமார் 30 லட்சம் ரூபா பெறுமதியான நகைகளை அடைவு வைத்துள்ளார். வீட்டில் இருந்த அந்த அடைவு பற்றிய குறிப்புகள், பதிவுத் துண்டுகளையும் கைத்தொலைபேசிகளையும் கொள்ளையர் எடுத்துச் சென்றுள்ளனர்.
குடும்பஸ்தரின் வருமான விவரங்கள், வேலை விவரம் பற்றியும் கொள்ளையர்கள் அங்கு கூறிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். இதனால் அந்த வீட்டுக்காரர் அதிர்ச்சியடைந்துள்ளார்.
விசாரணைகளை முன்னெடுத்துள்ளோம் என்று வவுனியாப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிறப்பாணை பிறப்பிக்கப்பட்ட 15 பேர் கைது-
பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள், அனைவரும் கொழும்பு, பேலியகொட பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினமிரவ மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக மேல்மாகாண, வடக்கு விஷேட விசாரணை பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கொள்ளை, களவு, உள்ளிட்ட பல்வேறுப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நீதிமன்றில் முன்னிலையாதவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger