கோடீஸ்வரர்கள் அதிகம் வாழும் நகரத்தில் மும்பைக்கு ஆறாவது இடம் / நைஜீரிய போராளிகளின் தாக்குதலில் முப்பது பொலீசார் உயிரிழப்பு


 

ind.moneyகோடீஸ்வரர்கள் அதிகம் வாழும் நகரத்தில் மும்பைக்கு ஆறாவது இடம்- 
‘வெல்த் இன்சைட்’ என்ற முன்னணி ஆய்வு நிறுவனம் அதிக அளவில் கோடீஸ்வரர்கள் வாழும் உலகின் முதல் பத்து நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவின் மும்பை ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது.
70 மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் வாழும் நியூயார்க் முதல் இடத்திலும், மாஸ்கோ (64 பேர்) இரண்டாவது இடத்திலும், லண்டன் (54) மூன்றாவது இடத்திலும், ஹாங்காங் (40 ) நான்காவது இடத்திலும், பெய்ஜிங் (29 ) ஐந்தாவது இடத்திலும், மும்பை ( 26 ) ஆறாவது இடத்திலும் உள்ளது.
இஸ்தான்புல் (24 ), ஷாங்காய் (23), பாரிஸ் (22), லாஸ் ஏஞ்செல்ஸ் 19-வது இடத்திலும் உள்ளது.
சாதாரண கோடீஸ்வரர்கள் கணக்கு பட்டியலில் உள்ள முதல் 20 நகரங்களில் ஒரு இந்திய நகரம் கூட இடம்பெறவில்லை.
4.6 லட்சம் கோடீஸ்வரர்களுடன் டோக்கியோ முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
குறிப்பிட்ட 20 நகரங்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கோடீஸ்வரர்கள் உள்ளனர். அதில் 11-வது இடத்தில் இந்தியா உள்ளது.
பெரும் பணக்காரர்கள் எண்ணிக்கையில் அமெரிக்காவே தற்போது முன்னணியில் இருக்கிறது.
2020-ம் ஆண்டில் இந்தியாவும், சீனாவும் பணக்காரநாடுகள் வரிசையில் இடம் பிடிக்கலாம்.
ஜப்பான், ஜெர்மனி போன்றவற்றைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு சீனா 2-வது பணக்கார வர்த்தக நாடாக மாறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் இந்தியாவும், வரும் 2020-ம் ஆண்டில், 11-வது இடத்திலிருந்து, 5-வது இடத்திற்கு முன்னேறும் என்று அந்த ஆய்வு நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
நைஜீரிய போராளிகளின் தாக்குதலில் முப்பது பொலீசார் உயிரிழப்பு- நைஜீரியா நசர்வா மாநிலத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த ஓம்பட்சே மதகுரு, மக்களை தங்கள் பக்கம் வலுகட்டாயமாக சேர்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரையும், சிஷ்யர்களையும் கைது செய்ய 60 போலீசார் வேனில் சென்றனர்.
அப்போது ஆயுதம் ஏந்திய போராளிகள் அலோக்யா என்னுமிடத்தில் போலீசார் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 17 போலீசாரை காணவில்லை.
இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா செல்ல இருந்த அதிபர் ஜொனாதன் தனது பயணத்தை ரத்து செய்துள்ளார்.

 
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger