அமீனா சாலியின் பெயரால் ஜப்னா முஸ்லிம் ஊடகத்தின் மோசடி!



ஊடகங்களுக்கு இடையில் போட்டி இருக்கத்தான் வேண்டும், அதற்காக செய்திகளை தாமாக செயற்கையாக உருவாக்கி அதன் மூலம் பரபரப்பு மற்றும் புகழ் தேட நினைப்பது மோசமான ஒரு செயலாகும். அமெரிக்க ஊடக ஜாம்பவான் என்று அழைக்கப்பட்ட ரூபர்ட் முர்டொக் என்பவர் செய்திகளை செயற்கையாக உருவாக்கும் கீழ்த்தரமான செயல்களில் ஈடுபட்டு உலக அரங்கில் கேவலப் பட்டுப் போனதும், அவருக்கு சொந்தமான நியூஸ் வீக்வாராந்த சஞ்சிகை பதிப்பகம் இழுத்து மூடப்பட்டதும் அனைவரும் அறிந்ததே.


அஸாத் சாலி அவர்கள் கைது செய்யப் பட்டது, அது தொடர்பான செய்திகள் அனைத்து ஊடகங்களிலும் வெளிவந்தன. வழமை போலவே இணைய ஊடகங்களுக்கு மத்தியில் செய்திகள், நிகழ்வுகளை விரைந்து வெளியிடுவதில் உள்ள போட்டி இதிலும் காணப் பட்டது. நேர்மையான போட்டி, எப்பொழுதும் ஆரோக்கியமானதாகவே இருக்கும்.

அஸாத் சாலி அவர்களின் மகள் அமீனா சாலி, குடும்பத்தவர்கள் சகிதம் கங்காராம விகாரையில் பூஜை வழிபாட்டில் கலந்து கொண்ட விவகாரம் சர்ச்சையை உருவாக்கியது. இது தொடர்பான செய்திகள், விமர்சனங்கள் என்பன இணைய ஊடகங்களிலும், Facebook இலும் பரவலாக முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் விமர்சனங்கள் குறித்து அஸாத் சாலி குடும்பம் பதில் வழங்கும்..!என்ற ஒரு அறிவிப்பு, அஸாத் சாலியின் குடும்பத்தவர்கள் சார்பில் குறித்த இணையத்தளத்தில் மட்டும், 08 ஆம் திகதி புதன்கிழமை வெளியாகியது. இந்த அறிவித்தல் வேறு எந்த ஊடகங்களிலும் காணப் படவில்லை.

அதனைத் தொடர்ந்து, 09 ஆம் திகதி வியாழக்கிழமை, அஸாத் சாலி குடும்பம் சார்பில், அமீனா அஸாத் சாலியின் பெயரில் தமிழ் மொழி மூலமான அறிக்கை ஒன்று குறித்த இணையத்தளத்தில் நாங்கள் காபிர்களாகி விட்டோமா…? ஆமீனா ஆஸாத் சாலிஎன்ற தலைப்பில் வெளியாகி இருந்தது.

குறித்த அறிக்கை, தமிழ் மொழியில் மாத்திரம், அதுவும் குறிப்பிட்ட முஸ்லிம் பெயர் கொண்ட இணையத்தளத்தில் மட்டுமே வெளியாகி இருந்தது. பொதுவாக இவ்வாறான பொது அறிக்கைகள் அனைத்து ஊடகங்களுக்கும் வழங்கப்படும் நடை முறை இருந்தும், இந்த குறிப்பிட்ட அறிக்கை மட்டும இந்த இணையம் தவிர்ந்த வேறு எந்த ஊடகத்திலுமே வெளிவரவில்லை.

ஒரு சில இணைய ஊடகங்கள், குறித்த இணையத்தளத்தில் இருந்து மேற்படி அறிக்கைய பிரதி பண்ணி, இணையத்தளத்தின் பெயரைக் குறிப்பிட்டு வெளியிட்டு இருந்தன.

அஸாத் சாலியை அறிந்தவன், முன்னர் அவரை ஆதரித்தவன் என்ற வகையில், மேற்படி அறிக்கையில் இருந்த பல விடயங்கள் தொடர்பிலும், மேலும் உதிரியாக சில விடயங்கள் தொடர்பிலும், அமீனா சாலிக்கு பகிரங்க மடல் ஒன்றை எழுதி, குறித்த இணையத்தளம் உட்பட, நானறிந்த குறிப்பிட்ட சில முக்கிய முஸ்லிம் ஊடகங்களுக்கும் அனுப்பி வைத்தேன்.

அந்த இணையத்தளத்தில் மட்டும் வெளியான மேற்படி அறிக்கயை மேற்கோள் காட்டி எனது பகிரங்க மடலை வரைந்து இருந்த பொழுதும், அவர்கள் எனது மடலை இதுவரை வெளியிடவில்லை. எனினும் ஏனைய ஊடகங்களில் பெரும்பாலானவை வெளியிட்டு உள்ளன.

நான் அறிந்த வகையில், அஸாத் சாலி குடும்பத்தில், அமீனா சாலி அவர்கள் ஆங்கில மொழி மூலம் கல்வி கற்ற ஒருவராகவும், ஏனையவர்கள் ஆங்கில மற்றும் சிங்கள மொழி மூலம் கல்வி கற்றவர்களாகவுமே உள்ளனர்.

இதன் காரணமாகவே, எனது மடலில் அமீனா சாலியை நோக்கி குறித்த விளக்கம் உங்களால் சுயமாக எழுதப்பட்டதா என்ற கேள்வி, அதன் தமிழ் மொழி நடையை நோக்குமிடத்து எழுகின்றது.என்று குறிப்பிட்டேன்.

அமீனா சாலிக்கான எனது பகிரங்க மடலை வெளியிட்ட ஊடகங்களில் கருத்து பதிந்த சில வாசகர்கள், குறித்த இணையத்தளத்தில், அமீனா சாலியின் பெயரில் வெளியான நாங்கள் காபிர்களாகி விட்டோமா…? ஆமீனா ஆஸாத் சாலிஎன்ற அறிக்கையை வெளியிடாமல் இருட்டடிப்பு செய்துவிட்டு, எனது கடிதத்தை மட்டும் வெளியிட்டு இருப்பதாக, குறித்த ஊடகங்கள் மீது குற்றச்சாட்டு சுமத்தி இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து இது குறித்து சற்று ஆராய வேண்டும் என்று முயற்சியில் இறங்கினேன்.
அஸாத் சாலியின் குடும்பம் சார்பில் விளக்கமளிக்கும் அறிவிப்பு, அமீனா சாலியின் பெயரிலான விளக்க அறிக்கை ஆகியன குறித்த இணையத்தளத்தில் மட்டுமே வெளியாகி இருந்தமை, அந்த அறிக்கையில் பயன்படுத்தப் பட்டிருந்த தமிழ் மொழிநடை, அடுத்தவரை குறை சொல்ல வார்த்தைகளை சூட்சுமமாக பயன்படுத்தியிருந்த வஞ்சக வரிநடை போன்றவை குறித்து சந்தேகம் எழுந்த நிலையில், நான் ஏற்கனவே நன்கு அறிந்த, தற்பொழுதும் அஸாத் சாலியுடன் நெருக்கமாக இருக்கும் சிலரை தொடர்பு கொண்டு இதன் பின்னணியை அறிந்து கொண்டேன்.

தங்களது தவறான செயல்பாடுகள் குறித்து சமூகத்தில் காணப்படும் விமர்சனங்கள் தொடர்பில் அறிந்திருந்தாலும், அவை தொடர்பில் அறிக்கை எதனையும் வெளியிடும் எந்த நோக்கமும் அமீனா சாலி உட்பட குடும்பத்தவர்கள் யாருக்கும் இருந்திருக்கவில்லை.
எனினும், புதன்கிழமை குறித்த இணையத்தளத்தில் இருந்து தொடர்புகொண்டு, இது தொடர்பில் நடந்த விடயங்களைப் பேசிவிட்டு, அஸாத் சாலி குடும்பம் சார்பில் ஒரு அறிக்கையை தாங்கள் தயாரிப்பதாக தெரிவித்து உள்ளனர்.
அதனைத் தொடர்ந்து ஆசாத் சாலி குடும்பத்தின் பெயரில் ஒரு அறிவிப்பை அவர்களே வெளியிட்டு உள்ளனர். அதனைத் தொடர்ந்து, மறுநாள் வியாழக் கிழமை அமீனா சாலியின் பெயரில் அறிக்கை ஒன்று அதே இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது.

இதனை புரியும்படியாக சொல்வதென்றால், திரைக்கதை, தயாரிப்பு, இயக்கம், இசை, நடிப்பு, பின்னணிப் பாடல்கள் என்று அனைத்தையுமே அந்தஇணையத்தளமே செய்துள்ளது. அமீனா சாலியின் பெயர் மட்டும் பயன்படுத்தப் பட்டுள்ளது

மேற்படி அறிக்கையில் உள்ள வார்த்தைகள், வசனங்கள், கருத்துக்கள் என்பவற்றுக்கு அமீனா சாலி பொறுப்பு இல்லை என்பதால், கேள்விகள், விமர்சனங்களால் பிரச்சினைகள் வந்து தங்களின் மோசடி அம்பலமாகி விடக் விடக் கூடாது என்பதற்காக, இந்த அறிக்கையின் கீழ் பதியப்பட்ட வாசகர்களின் விமர்சனங்கள், கேள்விகள், கருத்துக்கள் என்று Comments எதனையுமே அனுமதிக்கவில்லை / பிரசுரிக்கவில்லை. தற்பொழுது வரை எந்தக் குறிப்புக்களும் இல்லை. நான் பதிந்த குறிப்புக்கள் கூட பிரசுரமாகவில்லை.

மேற்படி காரணத்தினாலேயே எனது கடிதத்தையும் பிரசுரிக்க முடியாத நிலை குறித்த இணையத்தளத்திற்கு ஏற்பட்டுள்ளது.

அமீனா சாலி பெயரிலான குறித்த அறிக்கை அந்தஇணையத்தளத்தின் சொந்தத் தயாரிப்பு என்கின்ற காரணத்தினாலேயே அது வேறு எந்த ஊடகங்களுக்கும் வழங்கப் படவில்லை, கிடைக்கவுமில்லை. ஆகவே, குறித்த அறிக்கையை வெளியிடவில்லை என்று ஏனைய ஊடகங்களை குறை சொல்லுவது அர்த்தமற்ற ஒன்றாகும்.

அஸாத் சாலியின் கைதையும், முஸ்லிம்களின் பிரச்சினைகளையையும் மூலதனமாக வைத்து குறித்த இணையத்தளம் சுய லாபம் தேட முற்பட்டுள்ளமை இந்த விடயத்தின் மூலம் தெளிவாகியுள்ளது .

இவ்வாறான போக்கு மேலும் தொடர்வது மொத்த முஸ்லிம் சமூகத்திற்கும் கேடு விளைவிக்கும் ஒன்றாகும். இந்தஇணையத்தளத்தின் மேற்படி கீழ்த்தரமான செயல்பாடு, “எங்கே குண்டு வெடிக்கும்? எத்தனை பேர் மரணமடைவார்கள்? Breaking News போடலாம்என்று காத்திருப்பதாக சொல்லப்படும் குற்றச்சாட்டை உண்மைப்படுத்துவதாக அமைந்து விடுகின்றது.

இத்தகைய மனநிலை பாதிப்பு மேலும் மோசமடைந்தால், இவர்களே குண்டை வைத்துவிட்டு Breaking News வெளியிடும் கீழ்த்தரமான நிலைக்கு இட்டுச் செல்லக் கூடும்.

மேற்படி கீழ்த்தரமான நடைமுறையைக் கைவிட்டு, நேர்மையாக செயல்படும்படி அந்த இணையத்தள நிர்வாகத்தினைரை பகிரங்கமாக கேட்டுக் கொள்கின்றேன்.

இனாமுல்லாஹ் யாசீன்
கல்கிஸ்ஸ

Share this article :

+ comments + 4 comments

Anonymous
May 11, 2013 at 1:59 AM

யாழ் முஸ்லிம் சொந்தமாக எந்த செய்தியும் போடுவதில்லை.

அடுத்தவர்களின் செய்தியை திருடி தலைப்பை மட்டும் மாற்றி போடுவதும், இடைக்கிடை இஸ்லாஹ்திட்கு எதிரான செய்திகளைப் போடுவதும், இவர்களுக்கு கை வந்த கலை.

கொமண்ட்ஸ் இவர்களுக்கு சார்பாக இல்லாவிட்டால் அனுமதிப்பதே இல்லை.

மிகவும் மோசடியான வேலை செய்துள்ளனர். இது குறித்து அரசாங்க விசாரணை வேண்டும். இது மாபெரும் மோசடி ஆகும்

May 11, 2013 at 8:40 PM

http://www.jaffnamuslim.com/2013/05/blog-post_8934.html

May 11, 2013 at 9:53 PM

OWWORUWARUM WEWWERU KARUTHTHUKKLAIK KOORUM NILAYIL KULAMBI, PILAWU PADUWATHU EMATHU SAMUTHAAYAME...

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger