சிங்கப்பூர் செல்ல விடுத்த, துமிந்த சில்வாவின் கோரிக்கை நிராகரிப்பு / முதல் நான்கு மாதங்களில் விபத்துக்களால் 738 பேர் உயிரிழப்பு / மேலாதிக்கவாத அபிவிருத்தியிலிருந்து விலகல்

 

சிங்கப்பூர் செல்ல விடுத்த, துமிந்த சில்வாவின் கோரிக்கை நிராகரிப்பு-
ஜனாதிபதியின் தொழிற்சங்க ஆலோசகரான பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர கொலை வழக்கின் பிரதான சந்தேகநபரான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவினால் விடுக்கப்பட்ட கோரிகை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
சிங்கபூரிலுள்ள மவுன்ட் எலிசபெத் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக செல்வதற்காக விடுக்கப்பட்ட கோரிக்கையையே கொழும்பு மேலதிக நீதவான் பியந்த லியனகே இன்று நிராகரித்துள்ளார்.
வைத்திய பரிசோதனைக்கு வருமாறு துமிந்த சில்வா எம்.பியை பரிசோதனைக்கு உட்படுத்திய வைத்தியர் அறிவித்துள்ளமையினால் இரு வாரங்களுக்கு வெளிநாட்டுக்கு செல்வதற்கு அவருடைய கடவுச்சீட்டை விடுவிக்குமாறு அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
இரண்டு காரணங்களுக்காக அந்த கோரிக்கைக்கு இடமளிக்க முடியாது என்றும் வைத்திய பரிசோதனைக்கு செல்வதற்காக முறையான வைத்திய சான்றிதழ் முன்வைக்கப்பட்டவில்லை என்றும் சுட்டிக் காட்டிய மேலதிக நீதவான் அந்த கோரிக்கையை நிராகரித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி 50000 ரூபா ரொக்கப் பிணையிலும் தலா 500000 ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளிலும் விடுவிக்கப்பட்டதுடன் கடவுச்சீட்டையும் நீதிமன்றம் பறிமுதல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதல் நான்கு மாதங்களில் விபத்துக்களால் 738 பேர் உயிரிழப்பு-
இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 738 பேர் உயிரிழந்துள்ளதுடன் 2,061 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
குறித்த காலப்பகுதியில் 689 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மதுபோதை மற்றும் கவனக் குறைவுடன் வாகனம் செலுத்தியமையினால் இவ்வாறான விபத்துக்கள் சம்பவித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், கடந்த வருடத்தின் குறித்த காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் இடம்பெற்ற விபத்துக்களில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.
மேலாதிக்கவாத அபிவிருத்தியிலிருந்து விலகல்-
மேலாதிக்கவாதிகளின் நிர்வாகத்திற்கு உட்பட்ட அபிவிருத்தி முறையில் இருந்து இலங்கையை முழுமையாக மாற்றியுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சீனாவுக்கான நான்கு நாட்களுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி, சீனாவின் எக்ஸிம் வங்கியின் தலைவர் லி ருமிகுவை இன்று முற்பகல் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இலங்கையில் பலவித அபிவிருத்தி செயற்றிட்டங்களுக்காக எக்ஸிம் வங்கி வழங்கும் ஆதரவு தொடர்பிலும் ஜனாதிபதி இதன்போது தமது நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் எதிர்காலத்தில் திட்டமிட்டுள்ள அபிவிருத்தி யோசனை தொடர்பாக எக்ஸிம் வங்கியின் பங்களிப்பை எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
 

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger