தீக்குளித்த பிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு / துறைமுக தீ விபத்து 13 பேரிடம் வாக்குமூலம் / துறைமுகத்தில் இடம்பெற்ற தீ,விஜபத்து தொடர்பில் சந்தேகம்

 

தீக்குளித்த பிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு-
கண்டி தலதா மாளிகைக்கு முன்னால் நேற்றையதினம் தீக்குளித்த பிக்கு, இன்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
மாடுகள் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த பிக்கு நேற்று தீக்குளித்திருந்தார். இதனையடுத்து கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து தீக்குளித்த பௌத்த பிக்குவின் நிலை இன்றுகாலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்திருந்தன. இந்நிலையில் இன்றுமாலை அவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று புனித தலதா மாளிகைக்கு அருகில் தனக்கு தானே தீ வைத்துக் கொண்ட பௌத்த பிக்கு உடனடியாக கண்டி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
இவ்வாறு தீக்குளித்து உயிரிழந்தவர் சிறீசுகத்த விகாரையில் கடமையாற்றிய போவத்தே இந்திரரத்ன தேரர் என்பது குறிப்பிடத்தக்கது.
மிருகவதை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இவர் தீக்குளித்த நிலையில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
துறைமுக தீ விபத்து 13 பேரிடம் வாக்குமூலம்-
கொழும்புத் துறைமுக களஞ்சியசாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து தொடர்பில் இதுவரையிலும் 13 பேரிடம் வாக்குமூலங்கள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இரசாயன பகுப்பாய்வு நடவடிக்கைகளும் இன்று இடம்பெற்றுள்ளன.
கொழும்பு துறைமுக களஞ்சியசாலையில் நேற்று 24 ஆம் திகதி ஏற்பட்ட திடீர் தீ விபத்தையடுத்து களஞ்சியசாலை தொகுதியை பொலிஸார் பொறுப்பேற்றதுடன் விசாரணைகளையும் துரிதப்படுத்தினர்.
இந்நிலையிலேயே இதுவரையிலும் 13 பேரிடம் வாக்குமூலங்கள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இந்த தீயை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு இராணுவம், பொலிஸார், கடற்படையினர் மற்றும் கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு படையினர் அடங்களாக 150 தீயணைப்பு படையினர் சுமார் ஐந்து மணித்தியாலங்களாக முயற்சிகளை மேற்கொண்டனர்.
தீயை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்காக தீயணைப்பு வாகனங்கள் எட்டும் பயன்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
துறைமுகத்தில் இடம்பெற்ற தீ,விஜபத்து தொடர்பில் சந்தேகம்-
கொழும்பு துறை முகத்தில் ஏற்பட்ட தீ பரவல் சந்தேகத்திற்கு இடமானதாக அமைந்துள்ளதாக துறைமுக அதிகார சபை தொழிற்சங்கம் குறிப்பிட்டுள்ளது. அனைத்து இலங்கை பொது சேவையர்கள் சங்கத்தின் பொது செயலாளர் சந்ரசிறி மஹகமகே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தீ ஏற்பட்ட சமயம் குறித்த பகுதியில் பொறுத்தப்பட்டிருந்த தீயணைப்பு கருவி தொழிற்படாமை சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அத்துடன், கொழும்பு துறைமுக தீயணைப்பு பிரிவு, தீப்பரவல் ஏற்பட்ட இடத்திற்கு, தீ ஏற்பட்டு 30 நிமிடங்களின் பின்னரே வந்ததாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
நேற்று அதிகாலை ஏற்பட்ட இந்த தீப்பரவல் காரணமான அங்கு களஞ்சியப்படுத்தப்பட்டிருந்து பொருட்கள் அனைத்தும் முற்றான அழிவடைந்தன. எனினும் தீயினால் ஏற்பட்ட சேத விபரங்கள் இதுவரையில் கணக்கிடப்படவில்லை.
இந்நிலையில் இது தொடர்பில் ஆராய விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாக துறைமுக அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. அத்துடன், சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரும் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, 44 வர்த்தகர்களுடைய இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் இவ்வாறு தீயினால் முற்றாக அழிவடைந்துள்ளன. பொருட்களின் சேதம் தொடர்பில் 0112 482 579 என்ற தொலை பேசி இலங்கங்களுடன் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ள முடியும் என இலங்கை சுங்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
pikku-thee
 
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger