மகப்பேற்றின் போது கர்ப்பிணியொருவரை பலாத்காரம்: வைத்தியருக்கு எதிராக வழக்கு


 



மகப்பேற்றின் போது கர்ப்பிணியொருவரை பலாத்
காரம்: வைத்தியருக்கு எதிராக வழக்கு-
மகப்பேற்றின் போது கர்ப்பிணியொருவரை பலாத்காரம் செய்ததாக கூறப்படும் அரசாங்க வைத்தியருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மூன்று குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவருக்கு எதிராக நேற்று வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலையில் மகப்பேற்று சமயத்தின் போது கர்ப்பிணியை வல்லுறவுக்குட்படுத்தியதாக சந்தேகநபரான வைத்தியர் ஜயசாந்த பரணமன்ன என்பவர் மீதே சட்டமா அதிபர் குற்றஞ் சாட்டியுள்ளார்.
சந்தேநபர் 2009 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 02 ஆம் திகதி மகப்பேற்று அறையில் வைத்தே இந்த குற்றத்தை புரிந்துள்ளதாக அவருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சந்தேக நபரான வைத்தியர், நீதவான் தேவிகா தென்னக்கோனினால் 5 இலட்சம் ரூபா ரொக்க பிணை மற்றும் இரண்டு சரீரப்பிணைகள் அடிப்படையில் விடுவிக்கப்பட்டார்.
சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் அரச சட்டத்தரணியான ஹிமாஸி பெரேரா ஆஜராகியிருந்ததுடன் சந்தேக நபரின் சார்பில் சட்டத்தரணி இனோகா பெரேரா ஆஜராகியிருந்தார்.
இந்த வழக்கு விசாரணை ஓகஸ்ட் மாதம் 26 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
சர்வதேச கடனட்டை மோசடிகளுடன் தொடர்புடைய இருவர் கைது!
சர்வதேச கடனட்டை மோசடிகளுடன் தொடர்புடைய இருவர், யாழ். பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றையதினம் கைதான குறித்த சந்தேகநபர்களிடம் இருந்து மோட்டார் வாகனம், கையடக்கத் தொலைபேசி, கணணி உபகரணங்கள் மற்றும் 85,000 ரூபா பணமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger