பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷரப் தேர்தலில் போட்டியிடுவதற்கு பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் வாழ்நாள் தடை விதித்துள்ளது.
பெனாசீர் பூட்டோ கொலை, நீதிபதிகளை கைது செய்து சிறையில் அடைத்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷரப் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றார்.
பின்னர் அரசியல் கட்சியைத் தொடங்கிய அவர், மே 11-ம் திகதி நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தனது செல்வாக்கை நிலைநாட்ட முயன்றார்.
இதற்காக கடந்த மாதம் நாடு திரும்பிய அவருக்கு கடும் சோதனை காத்திருந்தது. அவரை பொலிசார், கைது செய்து வீட்டுக் காவலில் வைத்துள்ளனர்.
பெனாசிர் பூட்டோ கொலை வழக்கில் அவரது நீதிமன்றக் காவல் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதால், அவர் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது.
இதற்கிடையே முஷாரப் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என்று அவரது சட்டத்தரணிகள், பெஷாவர் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த மனு மீது இன்று (30) விசாரணை நடைபெற்றது. அப்போது முஷரப் வழக்கறிஞர்களின் வாதத்தை ஏற்க மறுத்த நீதிமன்று, முஷரப் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாழ்நாள் தடை விதிப்பதாக தீர்ப்பளித்தது.
Post a Comment