இன்புளுவன்சா AH1N1 என்ற வைரஸ் பரவலை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் தற்போது விலங்கு காய்ச்சல் நோயாக பரவி வரும் இன்புளுவன்சா AH1N1 என்ற வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் பல பிரதேசங்களிலும் இனங் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த வைரஸ் பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் பாலித்த மகிபாலவிடம் ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment