உலகை உலுக்கிய புகைப்படம்


கடந்த 2010ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நியூயார்க்கில் உள்ள Bronx என்னும் அடுக்குமாடி குடியிருப்பின் 5வது மாடியில் ஒரு வீட்டில் திடீரென தீ பிடித்ததால் அதில் வசித்த 8 பேர் வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டனர்.

ஒரே புகை மண்டலமாக காணப்படும் இந்த கட்டிடத்தின் மற்றுமொரு பகுதியில் தீ பரவத் தொடங்கியது. மனித மூளை மழுங்கும் நேரத்தில் 18 வயது பெண்ணான Vanessa Scott என்ன செய்தார் தெரியுமா? வீட்டில் இருந்த Zaniwah Alexandra என்னும் 7 மாத சொந்தக்கார பெண் குழந்தையை ஜன்னல் இடுக்கின் வழியே வெளியே அந்தரத்தில் தொங்கவிட்டு கையால் பிடித்துக் கொண்டிருந்தார்.
காரணம், உள்ளே மூச்சுவிட முடியவில்லை. தீ பரவத் தொடங்கியதால், புகை அதிகமாகி கண்ணுக்கு எதுவும் தெரியவில்லை. குழந்தையாவது மூச்சுவிடட்டும்­, பிழைத்துக் கொள்ள­ட்டும் என ஜன்னல் வழியே குழந்தையை காற்றில் தொங்கவிட்டு பிடித்துக்கொண்டிருந்தேன் என்று கூறியுள்ளார். இதன் பின்னர் தீயணைப்பு வீரர்களின் உதவியால் ஏணி மூலம் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.




Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger