கருத்தடை ஊசி மருந்தின் பின்னணி குறித்து ஆராயுமாறு பொதுபல சேனா வலியுறுத்தல்


யாழில் மீள்குடியேறிய முஸ்லிம் மக்களின் பிரச்சினை / பொதுபல சேனாவிற்கு உதவவில்லையென நோர்வே அறிவிப்பு

Print Friendly
கருத்தடை ஊசி மருந்தின் பின்னணி குறித்து ஆராயுமாறு பொதுபல சேனா வலியுறுத்தல்-
பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கிழங்குக் கொள்கலன்களில் 30,000 கருத்தடை ஊசி மருந்து கண்டு பிடிக்கப் பட்டுள்ளதானது பாரதூரமான விடயமாகும். எனவே இதன் பின்னணியில் யார்? எந்த அமைப்பு உள்ளது? என்பது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சர் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டுமென பொதுபலசேனா கோரிக்கை விடுத்துள்ளது. இல்லாவிட்டால் சிங்கள இனத்தை அழிக்கும் சதித்திட்டம் வெற்றி பெற்று விடுமென்று அவ் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக பொதுபலசேனாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் லிலந்த விதானகே மேலும் தெரிவிக்கையில், இக்கிழங்குக் கொள்கலன்களை பாகிஸ்தானியர் ஒருவரே இறக்குமதி செய்துள்ளார். அதற்குள்ளேயே 30000 கருத்தடை ஊசி மருந்துகள் கொண்டு வரப்பட்டமையை சுங்கத் திணைக்களம் கண்டுபிடித்துள்ளது.
இதற்கு முன்னரும் இவ்வாறு கருத்தடை மருந்துகள் இங்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம். சிங்கள இனத்தை அழிப்பதற்கும் இனப்பெருக்கத்தை குறைப்பதற்கும் மிகவும் சூட்சுமமாக சதித்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதை நாம் வெளியிட்டோம். ஆனால் அரசாங்கமோ அல்லது வேறு எவரும் கண்டுகொள்ளவில்லை. இன்று அது நிரூபணமாகியுள்ளது.
எனவே இந்தக் கருத்தடை மருந்து ஊசிகள் எந்த மருந்தகத்திற்காக கொண்டு வரப்பட்டது. இதன் பின்னணியில் உள்ள அமைப்பு எது? பாகிஸ்தானிய பிரஜை யாருக்காக இதனை கிழங்குக் கொள்கலன்களில் மறைத்துக் கொண்டு வந்தார்? என்பது தொடர்பில் உளவுப் பிரிவினர் இரகசிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும்.
பாதுகாப்பு அமைச்சும் இது தொடர்பில் அதிக கவனம் செலுத்தி இச் சதியின் சூழ்ச்சிக்காரர்கள் யாரென்பதை கண்டுபிடிக்க வேண்டும்.
இல்லாவிட்டால் சிங்கள இனம் அழிவதை தடுக்க முடியாது. வெறுமனே பாகிஸ்தான் பிரஜைக்கு தண்டப்பணம் அறவிட்டு விடுதலை செய்வதால் எதிர்காலங்களிலும் இவ் ஆபத்து தொடர்ந்த வண்ணமே இருக்குமென்றும் லிலந்த விதானகே தெரிவித்துள்ளார்.
யாழில் மீள்குடியேறிய முஸ்லிம் மக்களின் பிரச்சினை- 
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த நீதி அமைச்சர் ஹக்கீம், யாழில் மீள்குடியேறியுள்ள முஸ்லிம் மக்களை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
அங்கு மீளக்குடியேறியுள்ள முஸ்லிம் மக்களின் பல்வேறு பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்காக இன்னும் ஒரு மாத காலத்தினுள் நடமாடும் சேவை நடத்தப்படும் என்று அவர் கூறியுள்ளார். அதற்கு உரிய ஒழுங்குகள் மேற் கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீதியமைச்சரின் விஜயத்தின் போது மீளக்குடியமர்ந்த முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. குறிப்பாக மீளக்குடியமர்ந்த மக்கள் தமது வாழ்வாதாரத்தை முன்னெடுத்துச் செல்வதில் உள்ள முட்டுக்கட்டையான நிலைமை தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது.
மீளக்குடியமர்ந்த மக்களுக்கு வழங்கப்படும் 25 ஆயிரம் ரூபா கொடுப்பனவில் யாழ். மாவட்டத்தில் மீளக்குடியமர்ந்த முஸ்லிம் மக்களுக்கு 5 ஆயிரம் ரூபா மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் இதன்போது மக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
எனவே இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக உரிய அரச அதிகாரிகள் சகலரையும் உள்ளடக்கி நடமாடும் சேவை ஒன்றை நடத்தி மீள் குடியேறியுள்ள முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள முடியும் என அமைச்சர் கூறியுள்ளார்.
பொதுபல சேனாவிற்கு உதவவில்லையென நோர்வே அறிவிப்பு- 
பொதுபல சேனாவிற்கு நிதி உள்ளிட்ட எந்தவொரு உதவியினையும் வழங்கவில்லை என நேர்வே அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியான செய்திகளை வன்மையாக கண்டிப்பதாகவும் அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் அல்லது இலங்கைக்கு வெளியில் இனங்களுக்கு எதிராக செயற்படும் எந்தவொரு அமைப்பிற்கும் உதவியளிக்கப்பட மாட்டாது என நேர்வே அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை உட்பட எந்தவொரு நாட்டிலும் இன மத பேதங்களை ஏற்படுத்தவோ அல்லது அமைதியினை சீர்குலைக்கும் விதமாகவோ நோர்வே எந்தவொரு பங்களிப்பினையும் வழங்கவில்லை. அத்தடன் முஸ்லிம்களுக்கு எதிரான எந்தவொரு நிகழ்ச்சி நிரலும் எங்களிடம் கிடையாது.
எனினும், பொதுபல சேனாவின் உறுப்பினர்களுக்கு எமது நாடு சில வருடங்களுக்கு முன்னர் அழைப்பு விடுத்தமையையும் அவர்கள் அங்கு வந்தமையையும் ஏற்றுக் கொண்டுள்ளது.
எவ்வாறாயினும் குறித்த பிக்குகள் உள்ளிட்ட எட்டு பேர் கொண்ட குழுவானது பேச்சுவார்த்தைக்காகவே அழைக்கப்பட்டதாகவும் அவர்களுக்கு நோர்வே எவ்வகையிலும் நிதி உதவி வழங்கவில்லை என நோர்வே அரசாங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger