விமானப் படையிலிருந்து விலகும் இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ்-
இங்கிலாந்து இளவரசர் ஓரிரு மாதங்களில் விமானப்படை பணியை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இங்கிலாந்து இளவரசர் ஓரிரு மாதங்களில் விமானப்படை பணியை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ், ‘ரோயல் ஏர் போர்ஸ்’ எனப்படும் அந்நாட்டின் விமானப்படையின் ‘சீ கிங்’ மீட்பு மற்றும் தேடுதல் பிரிவில் ஹெலிகொப்டர் விமானியாக உள்ளார்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்களை வேட்டையாடிய ‘நேட்டோ’ படையில் இவர் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுமார் 3 ஆண்டுகளாக இப்பணியில் உள்ள வில்லியம்ஸ், கேட் மிடில்டனை திருமணம் செய்து கொண்டார். இளவரசி கேட் மிடில்டன் தற்போது கர்ப்பிணியாக உள்ளார்.
எதிர்வரும் ஜுலை மாதம் இத்தம்பதியருக்கு குழந்தை பிறக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனது முதல்வாரிசு பிறக்கும் வேளையில் குடும்பத்தை விட்டு வெகு தொலைவில், வெகு நாட்கள் பிரிந்திருப்பதை விரும்பவில்லை என சில மாதங்களுக்கு முன்னர் ஒரு செவ்வியின் போது இளவரசர் வில்லியம்ஸ் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்னும் ஓரிரு மாதங்களில் விமானப்படை பணியை விட்டு விலகப் போவதாக வில்லியம்ஸ் தனது உயரதிகாரியிடம் தெரிவித்துள்ளதாக இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
சிறுநீரகத்தை தானம், மோசடி செய்த பெண் கைது-
கடுமையான சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவருக்கு சத்திர சிகிச்சை மூலம் சிறுநீரகம் ஒன்றை மாற்றுவதற்கு தனது சிறுநீரத்தை தருவதாக கூறி அதற்காக ஒரு இலட்சம் ரூபாய் பணத்தையும் பெற்று மருத்துவ பரிசோதனைகள் அனைத்துக்கும் சென்ற பெண் ஒருவர் பின் சிறுநீரகத்தை வழங்க மருத்ததை அடுத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அலவத்துகொடை பிரதேசத்தை சேர்ந்த சிறுநீரக நோயாளி ஒருவர் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு உடநடியாக சிறு நீரக மாற்று சிகிற்சை ஒன்று செய்ய வேண்டும் என்று வைத்தியர்கள் ஆலோசனை வழங்கி இருந்தனர்.
அதன் பிரகாரம் ஒரு பெண் முன் வந்து அவருக்கு சிறு நீரகத்தை வழங்க ஒப்புக் கொண்டுள்ளார். பின் அதற்கான முன் பணமாக ஒரு இலட்சம் ரூபாயை பெற்ற அவர் அனைத்து மருத்துவ பரிசோதனைகளுக்கும் சென்றுள்ளார்.
அனைத்தும் முடிவடைந்து சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை நடக்கவிருந்த சமயத்தில் அப்பெண் தனது சிறுநீரகத்தை வழங்க மருத்ததனால் நோயாளி கடும் சிக்கலில் அகப்பட்டுக் கொண்டுள்ளார்.
அவர் தினமும் உயிருக்காக போராடிக் கொண்டிருந்த நிலையில் அவரது உறவினர்களால் அலவத்துகொடை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த பெண், நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
Post a Comment