இரத்தினபுரியில் பெரும்பான்மை இனத்தோரால் தோட்டக் குடியிருப்பு மீது தாக்குதுல்: இருவர் காயம்




இரத்தினபுரி வேவல்வத்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அலுப்பொல தோட்டப்பகுதிக்கு இன்று அதிகாலை 2 மணியளவில் வருகை தந்த இனந்தெரியாத குழுவினர் குடியிருப்புகளுக்கு சேதம் விளைவித்துள்ளதுடன் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதன்போது காயமடைந்த இருவர் பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மதுபோதையில் வந்த பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தோர் அப்பகுதி ஆலயத்தின் தர்மகர்த்தாவை தேடியதாகவும் அவரைக் காண முடியாத பட்சத்தில் அவரது சகோதரர் மீது தாக்குதல் நடத்தியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் தோட்டப்பகுதி மக்கள் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனின் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளனர். இதனையடுத்து உடனடியாக அப்பகுதிக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger